தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் விளக்கம்.!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டு முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மேலும், ஒரே இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், 8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேற்று கல்லூரிகள் … Read more

பள்ளிகள் திறப்பு: 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அண்மையில், வருகின்ற 16-ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்காக, … Read more

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்!

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்கள் மழையால் பாதிக்கப்பட்டு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறது. இதற்காக நிவாரணங்களை வழங்கும் பணி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்த பணியின்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் கலந்துகொண்டு நிவாரணங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்களை … Read more

இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது-அமைச்சர் செங்கோட்டையன் ..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை 2-ம் முறை எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மிக்க மகிழ்ச்சி – செங்கோட்டையன்..!

வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி அருகே கொடிவேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிராவில் மூடப்பட்டுள்ள தமிழ்வழி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அதிமுக-வில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். கடந்த 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி … Read more

ஆசிரியர் தகுதி சான்றிதழ் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம்.!

ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில அமைக்கவுள்ள வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார்சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். அது பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இவரிடம் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ்களின் செல்லுபடிக் காலம்  நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், இது குறித்து ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும் … Read more

1, 6, 9 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடக்கம்.? பள்ளி கல்வித்துறை தகவல்.!

17-ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிழும் வரும் … Read more

#JUSTNOW: பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

மிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேல்நிலை வகுப்பு … Read more

#BREAKING: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை – செங்கோட்டையன்.!

கொரோனா வைரஸ் காரணமாக தடுக்க நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அப்போது பேசிய அவர், … Read more

#BREAKING: 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு..? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 10-வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். சமீபத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என கூறினார். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியிடுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு … Read more