காவல்துறையின் மீதே நம்பிக்கையை இழந்துவிட்டாரா முதல்வர்? – சீமான்

தேசியப்புலனாய்வு முகமைக்கு வாசல்திறந்து விடுவதுதான் மாநிலத் தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற இலட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு என சீமான் அறிக்கை.  கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி,  தேசியப்புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு … Read more

தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது – சீமான்

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய என சீமான் வலியுறுத்தல்.  நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்தும் மீன்பிடித்த காரணத்தால், காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் … Read more

தமிழக அரசின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும் – சீமான்

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள … Read more

இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்! – சீமான்

இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான்  வலியுறுத்தல். இலங்கையில் அதிகளவில் சீன இராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகும் இலங்கைக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்து, இலங்கை குறித்தான வெளியுறவுக் … Read more

அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டாரு அண்ணாமலை – சீமான்

இரண்டு வருடத்தில் பாஜகவினர் அண்ணாமலையை விரட்டி விடுவார்கள் என சீமான் பேச்சு.  மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுகவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய், ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் … Read more

‘தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க’ – எச்.ராஜாவின் பேச்சு குறித்து சீமான் கருத்து

ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? என சீமான் பேச்சு.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், சீமான் மலையாளி என கூறியது தொடர்பாக கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? இவரை இங்க நடமாட விட்டது நாங்க செய்த தப்பு. ராஜாவிடம் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க … Read more

தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என சீமான் அறிக்கை.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து … Read more

முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான்

அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு கண்டனத்திற்குறியது என சீமான் அறிக்கை. அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினரின் தலையீட்டின் பேரில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு … Read more

அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான்

அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் … Read more

100 நாள் வேலைத்திட்டத்தால் திமுகவில் இருந்த விலகிய சுப்புலட்சுமி.? கடிதம் எழுதிய சீமான்.!

திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகியது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.   திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் திமுகவில் இருந்து விலகிவிட்டார். வெகு நாட்கள் முக்கிய பொறுப்பில் இருந்த சுப்புலட்சுமியின் விலகல் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் ஒன்றை எழுதி தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more