கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது – பிரமோத் சாவந்த்

கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது என்று கோவா அரசு அறிவித்துள்ளது. கோவாவில் பள்ளிகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவது சாத்தியமில்லை என்ற அச்சத்தில், வழக்கமாக வகுப்புகளை மறுதொடக்கம் செய்வதை ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்க்கின்றன. கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று கோவா முதல்வர் நேற்று தெரிவித்தார். இந்நிலையில், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னரே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கோவா அரசு முடிவெடுக்கும் என்று செப்டம்பர் கடைசி வாரத்தில் … Read more

புதுச்சேரியில் திறக்கப்பட்ட பள்ளிகள்! மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை … Read more

இன்றுமுதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு! விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டது. தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் … Read more

திறக்கப்படுகிறதா..?பள்ளிகள்- இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பு, பொதுத் தோ்வுகளைத் தள்ளி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை)ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இம்மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகியது.இந்நிலையில் அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு முதல் + 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? நாளை ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். தற்பொழுது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் அக். 15 ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறக்கப்படும் என … Read more

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31 வரை மூடல் – மணீஷ் சிசோடியா

கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர்-31 வரை மூடப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார். மேலும், பள்ளிகள் மூடப்படுவது குறித்து செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட உத்தரவு அக்டோபர் 5 வரை செல்லுபடியாகும். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுகையில்,  அக்டோபர் 31 வரை டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கான வழிமுறைகளை நான் வெளியிட்டுள்ளேன். இது குறித்த உத்தரவு விரைவில் … Read more

9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி  100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்த செப்டம்பர் 30க்கும் மேல் அவகாசம் நீட்டிப்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 100% கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்ததாக பெற்றோர்களிடம் இருந்து வந்த 111 புகார்களில் … Read more

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க முடியாது – குஜராத் அரசு முடிவு.!

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்  மாநிலத்தின் கொரோனா மத்தியில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என குஜராத் கல்வி துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாசாமா நேற்று தெரிவித்தார். காந்திநகரில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!

பள்ளிகள் திறக்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப் பாளையத்தில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், வரும் அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பள்ளிகள் … Read more

#BREAKING: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்.!

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். சரண்யா, பரனிஸ்வரன் உள்ளிட்டோரின் வழக்கை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர். ஹேமலதா தீர்ப்பு வழங்கியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்துரையாடல் … Read more