தொடர் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறை..!

தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கனமழை : இன்று இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நாகப்பட்டினம், திருவாரூர்,  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு..!

தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையின் காரணமாக சில பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். அதன்படி, கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு … Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில்  மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  பள்ளி மேலாண்மை குழு, இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில்  மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் … Read more

#BREAKING: தீவிரமடையும் விசாரணை..கள்ளக்குறிச்சி பள்ளியில் 2வது நாளாக சிபிசிஐடி ஆய்வு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் அமைந்துள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மனைவி ஸ்ரீமதி கடந்த 13-ஆம் தேதி மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர்கள் மாணவி தற்கொலை செய்யவில்லை, அவரது மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில் … Read more

இனிமேல் பள்ளிகளில் கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை – சமூக பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் கம்மல், செயின், காப்பு, கைகளில் கயிறு  போன்றவற்றை அணிய தடை விதித்து சமூக பாதுகாப்பு நலத்துறை உத்தரவு.  தமிழகத்தில் சமீப நாட்களாக பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் அதிகரித்து வருகிறது. தங்களது சாதியை அடையாளப்படுத்தும் கயிறுகளை கையில் அணிந்து கொண்டு பல ஜாதி குழுக்களாக பிரிந்து உணவு இடைவெளியின்போதும், விளையாட்டு நேரங்களிலும் மோதலில் ஈடுபட்டுவது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சமூக பாதுகாப்புத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளத. அதன்படி ஜாதியை … Read more

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றை விநியோகிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் விநியோகிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளியில் தேர்தல் : சின்னங்கள் ஒதுக்கீடு.., வேட்புமனு தாக்கல்.., வாக்களித்தவர்கள் விரலில் மை..! என்ன தேர்தல் தெரியுமா..?

கோவை, கோட்டை மேடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் நல்லாயன் தொடக்கப்பள்ளியில் தேர்தல் திருவிழா நடைபெற்றுள்ளது. கோவை, கோட்டை மேடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் நல்லாயன் தொடக்கப்பள்ளியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் 1-8 ஆம் வகுப்பு 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சட்டமன்ற தேர்தலை போன்று, வேட்புமனு தாக்கல், மனுக்கள் பரிசலானை, பரப்புரை, வாக்காளர் பட்டியல் என தேர்தல் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்தலில் மாணவர் தலைவர், துணை … Read more