கேரளாவின் பல்கலை.பாடத்திட்டத்தில் இடம்பெற்ற ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாற்றால் ஏற்பட்ட சர்ச்சை…!

கேரளாவின், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு,அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) சித்தாந்தவாதிகளான விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. … Read more