UGC NET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி … Read more

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி

குரூப் II, II A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. … Read more

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு…!

UPSC தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 18 அன்று  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதன்மை தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தற்பொழுது இந்த தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளமாகிய upsc.gov.in   மூலம் முடிவுகளை பார்க்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2021 நவம்பர் 21 -இல் நடைபெறக்கூடிய பொறியியல் முதன்மை தேர்வில் பங்கேற்க வேண்டும் என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள … Read more

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாகிறதா…?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாக வாய்ப்பு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12-ம் மாணவர்களுக்கு,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், … Read more

சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகள்…!

சிபிஎஸ்இ நிர்வாகம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை கருத்தில்கொண்டு,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதனால்,மாணவர்களுக்கு பள்ளிகளால் நடத்தப்படும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை அட்டவணைப்படுத்துவதற்கான கொள்கை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக அட்டவணைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்வதற்கான … Read more

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு.. 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம்..!

பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதற்காக நடைபெறுகிறது.  நடப்பாண்டில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. ஜனவரியில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் , கடந்த 1-ம் தேதி முதல் 6 தேதி வரை 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தேர்வு எழுதினர். ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 24 மாணவர்கள் 100 … Read more

இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவிட்ட பதிவில் , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

# கவனத்திற்கு # +2க்கு ஆக.,1க்குள் ரிசல்ட்???தேர்வுக்கு தயாராக அறிவுரை!

ஆக.,1க்குள் தேர்வு முடிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்ச்சி அளிக்கும் வகையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.  ஆண்டு முழுவதுமாக பள்ளிக்கு வராதவர்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா, ஐந்து முதல் ஆறு பேர் வரை உள்ளதாகவும் இந்த விபரங்களை எல்லாம்  பட்டியலிட்டு கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று முடிவு வெளியிடப்படும் என்றும்  கடந்த மார்ச்.,24ல் நடைபெற … Read more

#FACTCHECK: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு ?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து  வெளியான தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இந்த … Read more

+2 ரிசல்ட் இப்பவா?? அப்ப எழுதாதவங்க?? வெளியாகிய ரிசல்ட் தகவல்

+ 2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் குறித்த தகவலானது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் + 2 பொதுத்தேர்வானது, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியோடு  முடிவடைந்தது.தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடுவது குறித்த ஆலோசனைகள் திவீரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் முடிவுகள் வெளியீடு பல சிக்கல் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்  ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில்,முடிவுகள் வெளியிடுவது, உயர்கல்வியில் … Read more