கொரோனா காலத்தில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தல் ! மாலை வெளியாகிறது முடிவு.!

இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி மார்ச் மாதம் 10 மாநிலங்களில் 36 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  மீதமுள்ள 19 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.குஜராத் மற்றும் ஆந்திராவிலிருந்து  தலா 4 இடங்கள்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து  தலா 3 இடங்கள்,ஜார்கண்டிலிருந்து 2 இடங்களும், மணிப்பூர் ,மிசோரம் மற்றும் மேகாலயாவிலிருந்து தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.   காலை … Read more

ஜூலை 2வது வாரத்தில் 10, 11, +2 தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்.!

தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் – அமைச்சர் செங்கோட்டையன். தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சிலரை தவிர 10-ம் வகுப்பு மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள … Read more

#Breaking: 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் … Read more

வடை ரூ.10, டீ ரூ.28.! தேர்தலில் தோற்கடித்த வாக்காளர்களுக்கு விரக்தியில் போஸ்டர் அடித்து ஒட்டிய வேட்பாளர்.!

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டரில் அச்சியிட்டு அலுவலக தகவல் பலகையில் அவர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். … Read more

#Breaking: வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல்செய்ய உத்தரவு.!

13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை மதியம் 12.30க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக 10  வழக்கறிஞர்கள் முறையிட்டதால் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவுவிட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் … Read more

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல  – தமிழிசை

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல  என்று தமிழக  பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.இதில் தமிழக  பாஜக தலைவர் தமிழிசை  நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்கிறேன் என்றும்  ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும் என்று தெரிவித்தார். இதன்படி சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி … Read more

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு…!!

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வானது டிச.22, 23 இல் நடைபெற்றது.இந்நிலையில் காவல்துறை சார்பு ஆய்வாளர் (finger print)  எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வு முடிவுகளை http://www.tnusrbonline.org  என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டுவிட்டது – சிவசேனா…

 பாரதிய ஜனதாவின் வெற்றித்தேர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பா.ஜ.க. ஆட்சி செய்து வந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் அக்கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வி பா.ஜ.க.வுக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. தோல்வி குறித்து சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. சிவசேனா கட்சித்தலைவர் … Read more

ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் காங்கிரஸ் முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதையொட்டி, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கரில் ஆட்சியை இழக்கும் பாஜக…. பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்…!!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சத்தீஸ்கர் முன்னணி நிலவரம்: காங்கிரஸ் : 51 பாஜக: 22 ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் – 6 … Read more