ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

Shaktikanta Das

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவிப்பு.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் சக்திகாந்த தாஸின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு .! முக்கிய அறிவிப்பை வெளியாகுமா..?

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டமாக அந்த திட்டங்களின் அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். நிதியமைச்சரின் அறிவிப்புகக்கு பின்னர் முதல் முறையாக  செய்தியாளர்களை  சந்திக்க உள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் இதற்கு முன்னர் 2 முறை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது