ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு ..!

RRvsRCB Toss [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதானல் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இது வரை தோல்வியே காணாத ராஜஸ்தான் அணியை தற்போது தொடர் தோல்வியிலிருந்து … Read more

‘RCB இப்போவும் தப்பு தான் பண்ணிருக்காங்க ..’ – முன்னாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங்

RCB Harbajan [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 3 தோல்விகளை தளுவி உள்ளது. இதை பற்றி முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் அவரது கருத்தை கூறி இருக்கிறார். பெங்களூர் அணி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தோல்வியின் காரணம் குறித்தும் அவர்கள் … Read more

2-வது வெற்றியை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ..! தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ..!

RCBvsLSG [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது. பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் … Read more

ஒரே வீரர் .. ஒரே அணி ..!! 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் யார் யார் தெரியுமா ?

100 match player [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஒரே அணியில் இடம்பெற்று விளையாடி வருவது என்பது ஒரு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை, அப்படி விளையாடினாலும் எதிர்பாராத விதமாக வேறு அணியில் இடம் பெரும் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விடும். மேலும், ஒரே அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக 100 போட்டிகளை கடந்து … Read more

ஐபிஎல்-னா அழுத்தம் இருக்கும் ஆனா அவர்… வெற்றிக்கு பிறகு பேட் கம்மின்ஸ் புகழாரம்.!

Pat Cummins

Pat Cummins: அபிஷேக் சர்மா ஈர்க்கக்கூடியவர், உண்மையில் அவர் ஐபிஎலில் கூலாக விளையாடுகிறார் என பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசினார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது . 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற … Read more

ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை அடித்து நொறுக்கிய ஹைதராபாத்!

Hyderabad broke RCBs 11-year record

MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது.  நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்  20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் … Read more

அவரது ஆட்டம் எங்களை வழி வகுக்கிறது – வெற்றி குறித்து டூ பிளெஸ்ஸிஸ்.!

Faf du Plessis - virat

IPL 2024 : விராட் கோலியின் பேட்டிங் குறித்து RCB கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பாராட்டி உள்ளார். ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், முதல் … Read more

தீராத ஸ்பைடர் கேமரா சர்ச்சை ..!! பரிதாபமாக ஆட்டமிழந்த ஜிதேஷ் சர்மா !

Jithesh Sharma Wicket [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக பஞ்சாப் அணிக்கும், பெங்களூரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஸ்பைடர் கேமரா சர்ச்சை என்பது வந்துவிடும். அதே போல இந்த போட்டியிலும், ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. நடைபெற்று வந்த நடப்பு ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய … Read more

நம்பர் முக்கியமல்ல.. நினைவுகள் தான் முக்கியம்.! விராட் கோலி நெகிழ்ச்சி.!

Virat Kohli RCB

Virat Kohli : உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பி பார்க்கும் போது நம்பர்களை விட நினைவுகள் தான் முக்கியம் என விராட் கோலி பேசினார். ஐபிஎல் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய டுபிளஸீஸ் தலைமையிலான பெங்களூரு அணியின் தொடக்க வீரர் … Read more

விராட், டிகே அதிரடியில் சொந்த மண்ணில் பஞ்சாபை வதம் செய்த பெங்களூரு ..!

RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவானின் பொறுமையான ஆட்டத்திலும், அதன் பிறகு களமிறங்கிய ஜிதேஷ் சர்மா, சாம் கர்ரான் கூட்டணியாலும் அந்த அணி ஸ்கோரை சற்று உயர்த்தியது. இதனால், 20 … Read more