பீட்சா டெலிவரி செய்யலாம்..ரேஷன் பொருள் டெலிவரி செய்யக்கூடாதா?- கெஜ்ரிவால்..!

டெல்லியில் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த திட்டம் அமல்ப்படுத்த 2 நாட்கள் உள்ள நிலையில் மத்திய அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறாததாலும், நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெறுவதாலும் இதற்கு அனுமதி தர டெல்லி துணை நிலை ஆளுநர் … Read more

#BREAKING: தமிழகத்தில் காலை 8 மணி முதல் 12 மணி வரை நியாய விலைக்கடைகள் இயங்க அனுமதி..!

நாளை முதல் காலை 8மணி முதல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8மணி முதல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் … Read more

#BREAKING: ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடை செயல்படும் -தமிழக அரசு உத்தரவு..!

கொரோனா நிவாரணத் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியுதவியாக அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000 அறிவித்துள்ளது. அதில் முதற்கட்டமாக முதல் தவணையாக  ரூ.2000-க்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூ.2,000/- ரொக்கம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனைப் பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் … Read more

15-ம் தேதி முதல் ரூ.2000 வழங்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி..!

15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூபாய் 2000 வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனே மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர். அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டர். முதல் தவணையாக ரூ.2,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதமே வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். … Read more

இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் நிதி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5,000 ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும், இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறமிருக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ … Read more

தமிழக முதல்வர் நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை இன்று தொடங்கிவைக்கிறார்…

தமிழகம் முழுவதும் நடமாடும்  ரேஷன் கடை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சகத்தின் கடுப்பாட்டில்  33,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், சில மலை கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை எனப்படும் வாகனங்களின்  வாயிலாக, கார்டுதாரரின் வீடுகளுக்கு அருகில் சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு, எம்.எல்.ஏ.,க்கள் பலர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். … Read more

BREAKING: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருகின்ற 31-ஆம் தேதிவரை ஊரடங்கு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு  காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளன. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புலம் பெயர் தொழிலாளி மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க … Read more

இன்று முதல் ரேஷன் பொருள்கள் வாங்க டோக்கன் விநியோகம்.!

தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ரேஷன் பொருள்களை பெறுவதற்கான டோக்கன் வீடுகளுக்கே சென்று  வழங்கும் பணி 6-ம் தேதி(அதாவது இன்று) தொடங்கி 9 -ஆம் தேதி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வீடுகளுக்கே … Read more

#BREAKING: ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு.!

தமிழகத்தில் ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும்ப  அடைதாரர்களுக்கும் ரூபாய் 1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும்  ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப … Read more

மதுரையில் இன்று முதல் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.!

சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து  தற்போது மதுரை மாவட்டத்திலும் கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை  ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரையில் 5.39 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 ரூபாய் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று … Read more