ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் – மு.க. ஸ்டாலின்

ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள … Read more

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் காலமானார்!

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த 27 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.