ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? – கருக்கா வினோத் வாக்குமூலம்!

karukka vinoth

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? என்று போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன்பு இருக்கும் பேரிகேட் (தடுப்பு) அருகில் மிகுந்த பாதுகாப்பு இருந்து கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக குற்றவாளியை … Read more

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் பாட்டீல் வீச்சு.! கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்.! 

Karukka Vinoth

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் கேட் அருகில் பேரிகாட் (தடுப்பு) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயம் அருகில் இருந்த சென்னை பெருநகர காவல்துறையினர் கருக்கா வினோத்தை உடனடியாக கைது செய்து அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பரிமுதல்செய்தனர். கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு … Read more

தீவிரவாதிகள் நடமாடும் இடமாக தமிழ்நாடு இருக்கிறது.! எல்.முருகன் பரபரப்பு குற்றசாட்டு.!

Central Minister L Murugan

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” எனும் நடைப்பயணத்தை தமிழக பாஜகவினர் துவங்கி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று நாமக்கல் பகுதியில் “என் மண் என்  மக்கள்” நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் , குமாரபாளையம் பகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து நேற்றைய நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழக அரசு … Read more

ஆளுநர் மாளிகை பெட்ரோல் பாட்டில் வீச்சு.. மயிலாடுதுறை சம்பவம்.! தமிழக காவல்துறை விளக்கம்.! 

Tamilnadu Police Release CCTV footage for karuka vinoth petrol bomb incident

நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை முன்பு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டு (தடுப்பு பலகை) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் மாளிகை தரப்பில் … Read more

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு.! கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வக்கீல்.?

Karuka Vinoth

நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கடந்த வருடம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் உள்ளிட்ட … Read more

பெட்ரோல் குண்டு வீச்சு! புகாரை பதிய மறுப்பதாக ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

GOVERNOR HOUSE

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி இருந்தது. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை உடனடியாக கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.! கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது காவல் துறையினர், வெடிபொருள் தடுப்பு சட்டம், … Read more

பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

raguapathi

தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றதில் இருந்து, அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு இயற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்து இடாமல் நிலுவையில் வைப்பது, அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது கண்டத்துக்குரியதாக மாறியது. ஆளுநரின் செயலும் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை ஆளுநர் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை இல்லை என பல்வேறு கருத்துக்களை … Read more

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

Karuka Vinoth - Raj bhavan Chennai

நேற்று ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரிகார்ட் பக்கம் பெட்ரோல் குண்டு வீசிய உடனேயே பாதுகாப்பு பணியில் இருந்த  காவலர்கள் கருக்கா வினோத்-ஐ தடுத்து உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்திடம் இருந்து வீசுவதற்கு வைத்து தயார் நிலையில் வைத்து இருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட … Read more

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.! காவல்துறை விளக்கம்.! 

Chennai Commissioner Prem Anand Sinha

இன்று  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மெயின் கேட் முன்பு தேனாம்பேட்டை பகுதியியை சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் வினோத்தை கைது செய்து உள்ளனர். இவர் இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி அதன் பெயரில் சிறை தண்டனை பெற்று சென்ற வாரம் தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு – அண்ணாமலை கண்டனம்

Annamalai, BJP State president

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிக பாதுகாப்பு இருக்கும் ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷமிட்டதாக தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட வினோத்திடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை … Read more