3 முறை நிராகரிப்பு.. ஆகஸ்ட் 14-ஆம் தேதி சட்டசபை கூடுகிறது.!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்  தடை விதித்தது. இதனால், முதல்வர் கெலாட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபக்க முயற்சி செய்து … Read more

அதிகரிக்கும் போலி முகவரிகள்.. கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ..ராஜஸ்தான் அதிரடி.!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா சோதனைக்கு அம்மாநில சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனைக்கு வரும் பலர் தங்கள் உண்மையான முகவரியை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் நபருக்கு ஆர்டி-பி.சி.ஆர் செயலியில்  ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், சோதனைக்கு உட்படுத்தப்படுபவருக்கு ஆதார் அட்டை இல்லை என்றால் … Read more

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த முதல்வர்.. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் முயற்சி..!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி,  தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான்  சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு … Read more

#BREAKING: சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் தற்போதைக்கு  எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டனர். இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் … Read more

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி மோசடி.! 25 வயது இளைஞர் கைது.!

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி ஒரு இளைஞர் ராஜஸ்தானில் உள்ள தொழிலாளர் அமைச்சர்களை ஏமாற்றி உள்ளதாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள தெஹ் முண்டாவர் எனும் ஊரில் வசிப்பவர் சந்தீப் சவுத்ரி. 25 வயதான இவர் அங்குள்ள ஓர் இரு சக்கர வாகன கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வேலையை அண்மையில் இழந்துள்ளார். பின்னர், தனக்கு வேலை இல்லாததால், வேலை கிடைப்பதற்காக தான் … Read more

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.. நாளை சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மனு விசாரணை .!

தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் ஆதரவு  எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும்  துணை முதலமைச்சர்  சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக  சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றார். சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், … Read more

அப்பாவி முகத்தை வைத்து..அத்தகைய காரியத்தைச் செய்வார் என யாருக்கும் தெரியாது .. அசோக் கெஹ்லோட்.!

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜஸ்தான் முதல்வர் ,  எங்கள் எம்.எல்.ஏக்கள் எந்த தடையும் இல்லாமல் தங்கியிருக்கிறார்கள். ஆனால், சச்சின் பைலட் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்துள்ளனர். அவர்கள் எங்களை அழைத்து தொலைபேசியில் அழுகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட மொபைல் போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் எங்களுடன் சேர விரும்புகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் தெரிவித்தார். சச்சின் பைலட் கடந்த 6 மாதங்களிலிருந்து பாஜகவின் ஆதரவுடன் சதி செய்து கொண்டிருந்தார். அரசாங்கத்தை கவிழ்க்க சதி நடக்கிறது என்று நான் … Read more

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. பாரதீய பழங்குடியினர் கட்சி ஆதரவு.!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெஹ்லோட் அரசு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், 200 பேர் கொண்ட சபையில் இரண்டு எம்.எல்.ஏக்கள் கொண்ட பாரதீய பழங்குடியினர் கட்சி ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை காங்கிரசுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், பாரதீய பழங்குடியினர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான ராஜ்குமார் ரோட் மற்றும் ராம்பிரசாத் டிண்டோர் ஆகியோர் ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவளிக்க அக்கட்சி உறுதியளித்துள்ளது. பாரதிய பழங்குடியின கட்சியின் தலைவா் மகேஷ்பாய் வாசவா கூறுகையில், … Read more

3.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட மேலாளரை பொறி வைத்து பிடித்த சிபிஐ அதிகாரிகள்.!

3.5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட ராஜஸ்தானில் செயல்பட்டு வந்த பவர் பிளான்ட் மேலாளரை சிபிஐ அதிகாரிகள் பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் பலோடி எனும் ஊரில் செயல்பட்டு வரும் நேஷனல் தெர்மல் பவர் ப்ளண்ட் கார்பரேஷனில் மேலாளராக பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ், கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குளறுபடியை சமாளிக்க 3.5 லஞ்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடிக்க 1 லட்சம் … Read more

#பறந்தது 18 MLA.,க்கள் தகுதி நீக்க நோட்டிஸ்! பரபர ராஜஸ்தான்

துணை முதல்வர் பதவியிலிருந்து தூக்கப்பட்ட சச்சின் பைலட் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும்  தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு ராஜஸ்தான் சட்டசபை சபாநாயர் சி.பி.ஜோஷி, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுள்ளது. ராஜஸ்தானில்  முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும்  துணை முதல்வராகவும் இருந்து வந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். மேலும் தன்னுடைய  ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டு உள்ளார்.இதனால்  … Read more