தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராடுவேன்.. முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி,  தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான்  சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு … Read more

அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம் தற்பொழுது ராஜஸ்தானில்.. நடந்தது என்ன?

அமெரிக்காவில் ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியது போலவே, ராஜஸ்தானில் நேற்று ஒரு காவலர் இளைஞர் ஒருவரின் கழுத்தின் மேல் தனது முட்டியை வைத்து சில வினாடிகள் அழுத்தினார். தற்பொழுது அந்த வீடியோ, வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக விடிய விடிய … Read more

“வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளியுங்கள்”- ராஜஸ்தான் முதல்வர்!

கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அழித்துகொண்டே வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் … Read more

படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்.! பதறும் இந்திய விவசாயிகள்

உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.  பயிர்களை சேதப்படுத்தி பெரும் உணவு தட்டுப்பாடு பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியினங்களாக அறியப்படுகிறது பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த பேரழிவு பூச்சிகள் தற்போது கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் பெரும் உணவு தட்டுப்பாடை ஏற்படுத்தியுள்ளது.  இதன் … Read more

மதுபான ஆலைகளை வேறு விதமாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு யோசனை.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கைகளை சுத்தமாக கழுவ 60 சதவீததிற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடிஸர் உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் சானிடிஸர் தேவை அதிகரித்து வருகிறது.  இந்த தேவையை பூர்த்தி செய்ய ராஜஸ்தானில் இயங்கி வரும் 9 … Read more

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ அதிகாரியின் வேறொருவருடன் போனில் பேசிக் கொண்டிருப்பதை மாமியார் அதை பற்றி கண்டித்துள்ளார். இதனால் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் கடிக்க வைத்து கொன்றதாக மருமகள் மற்றும் அவரின் காதலர் போலீசார் கைது செய்துள்ளனர். கணவர் மனைவியிடம் ஒற்றுமை இருக்குதோ இல்லையோ, ஆனால் மாமியார் மருமகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கும். அது மருமகளுடையை  வார்த்தையை கேக்கும் வரைக்குத்தான் அதுவும் இருக்கும். ஏதாவது தப்பை தட்டிக்கேட்டால் மருமகள் கோவமாக காணப்படுவார்கள். அதுபோன்று ராஜஸ்தான் மாநிலம் … Read more

கான்வாயில் தவறி விழுந்த 4வயது சிறுவன்.. காப்பாற்றிய இளைஞர்க்கு பாராட்டு..!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள சாலை ஒன்றில் கழிவுநீரில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் வெளியேறி கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாக சென்று கொண்டிருந்த நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், அந்தக் கால்வாயை தாவி கடக்க முயற்சி செய்தான். ஆனால் நிலை தடுமாறி அந்த சிறுவன் கால்வாயின் விழுந்தான். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் அந்த சிறுவனை கால்வாயில் இருந்து மீட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பாராட்டினர்.

ராஜஸ்தான் இடைத்தேர்தல்…பிஜேபி வெற்றிகரமான தோல்வி…!!

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்துள்ளது. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமணன் சிங்க் மரணமடைந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள 199 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.பதிவாகிய வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.ராம்கர் தொகுதியில் இடைத்தேதலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷாபியா ஜிபேர் 83311 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாரதீய ஜனதா … Read more

"ராஜஸ்தான் முதலமைச்சர் தேர்வு" சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது…!!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு ஒரு இடம் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் … Read more

வாக்குப்பதிவு இயந்திரம் கேட்பாரற்று சாலையில் கிடந்தது…!!

ராஜஸ்தான் மாநிலம் வாக்குப்பதிவு முடிந்து சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் கேட்பாரற்று சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகஞ்ச் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று ஷாகாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்தது. இதனைக் கண்ட … Read more