அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி!

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வாகியுள்ளார். புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி கடந்த 2016-ல் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நடந்த தேர்தலில் லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக காங்கிரஸ்காரரான ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.