அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்..!

சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை  தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும்,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் சரணடைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் வழங்கினார். பொன்முடிக்கு  மூன்று ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் … Read more

ஜூன் மாதத்திற்குள் வடிகால் பணிகள் முழுதாக முடிந்துவிடும்.! – அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி.!

தேக்கம் அடைந்துள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  நெல்லையில் நடைபெற்று வரும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன நடக்கிறது என்பது குறித்து ஆராய்ந்தார். பின்னர் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘ ஜூன் மாதத்திற்குள் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும்’ என தெரிவித்தார். தேக்கம் அடைந்துள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் … Read more

ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது – அமைச்சர் ராஜகண்ணப்பன்…!

போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அனைத்து பேருந்திலும் பயணிக்க அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலைஅறிக்கை மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், இன்று பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், … Read more

அடேங்கப்பா..!தீபாவளியை முன்னிட்டு எத்தனை பேர் வெளியூர் பயணம்?,எவ்வளவு வசூல் தெரியுமா? – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

சென்னை:தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 இலட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், இதன் வாயிலாக மொத்தமாக 8 கோடியே 37 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக, 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: … Read more

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்து – அமைச்சர் ராஜகண்ணபன்..!

3 பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணபன் அறிவித்துள்ளார். தாம்பரம் ரயில் … Read more

#BREAKING: அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..!

அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு போக்குவரத்தை சார்ந்த 702 ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கொரோனா அதிகரிப்பால் மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் … Read more

#BREAKING: ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை – அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் ..!

ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இதுவரை தமிழ்நாட்டில் 6 கோடியே 58 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more