ராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது – ஜோதிமணி

ராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது என ஜோதிமணி ட்வீட். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் … Read more

கங்கை கரையில் 2000 உடல்கள் கண்டெடுப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உ.பி எல்லையில் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எண்ணிக்கையில் குழப்பம் – அன்னை கங்கை அழுகிறாள் ராகுல் காந்தி ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மற்றும் உத்திர பிரதேச எல்லையில் உள்ள 1,140 கி.மீ நீளம் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் நீரில் மிதந்தபோது கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள்  வெளியாகியது. மேலும் உத்திர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க இடம் கிடைக்காத காரணத்தினால் இந்த … Read more

கொரோனா அதிகரிப்பு..! “மத்திய அரசு தன் வேலையை சரியாக செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது”-ராகுல்காந்தி..!

நாட்டின் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க ,மத்திய அரசு தனது வேலையைச் சரியாக செய்திருந்தால்,வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசானது முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

திடீரென கடலுக்குள் குதித்த ராகுல் காந்தி…! ஒரேயொரு மீன் தான் கிடைத்தது…!

கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றுள்ளார். கேரளாவின் வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி ஆகும். இங்கு அவர் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா சென்றுள்ளார். எங்கு சென்றாலும் மக்களோடு மக்களாய் இயல்பான முறையில் பழகும் இவரது குணம் மக்களை கவர்ந்து இழுக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி … Read more

இந்தியாவின் இரும்பு பெண்மணியின் 103-வது பிறந்தநாள்! ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில், ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை. இந்தியாவின் இரும்பு பெண்மணியும், முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி, இன்று தனது 103 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர்.  இதனையடுத்து, நாடு முழுவதிலும் காங்கிரஸ் … Read more

ராகுல்காந்தியை போல் ஒரு இளைஞர் தலைவராக வர வேண்டும் – பஞ்சாப் முதல்வர்!

காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல்காந்தியை போன்று ஒரு இளைஞர் தேச தலைவராக மீண்டும் வர வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று தன் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். அவரது ராஜினாமாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரென ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் அலுவல் காரிய கமிட்டிற்கு அனுப்பினார். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், … Read more

ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது – காங்கிரஸ் தொண்டர் தற்கொலை முயற்சி!

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராகுல்காந்தி அவர்கள் ராஜினாமா செய்யக்கூடாது என்றும் அவர் ராஜினாமா செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தின் எதிரே … Read more

ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்த புதுவை முதல்வர்…!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தங்கத்தேர் இழுத்துள்ளார். ராகுல் காந்தி இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

தான் பிறக்கும் போது உடன் இருந்த செவிலியரை இன்று கண்டார் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி பிறக்கும் போது அவரது தாயார் சோனியா காந்தி அவர்களுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் ராஜம்மா அவர்களை இன்று ராகுல் காந்தி சந்தித்தார். கேரளாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இதை செய்துள்ளார். கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்தேரி கல்லூர் வடபகுதியைச் சேர்த்தவர் ராஜம்மா.அவருக்கு தற்போது வயது 72, டெல்லியில் ஹோமி – பேமி  மருத்துவமனையில் செவிலியராகப் பயிற்சி பெற்று ராணுவத்தில் செவியராக இருந்து ஒய்வு பெற்றவர்.இவர் செவிலியராக இருந்த மருத்துவமனையில் தான் … Read more

நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்து விட்டார்-ராகுல் காந்தி

நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரால் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்து விட்டார் . அதேபோல் மசூத் அசார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவரை பாகிஸ்தானுக்கு தப்ப விட்டது யார்? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சியில் இருந்தது பா.ஜ.க தான் … Read more