மக்களுக்கு சவுக்கடி கொடுத்த லாரன்ஸ்!மிக்சி, கிரைன்டர்களுக்காக வாக்களிக்காதீர்கள்….

நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்டம் குழுமூரில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில்  கலந்து கொண்டார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், அனிதா நினைவாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கு உதவுவதற்காகவே தாம் வந்திருப்பதாக கூறினார். இனி வரும் தேர்தல்களிலாவது, கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்குவோருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரஜினிகாந்த் தெரிவித்த ஆன்மிக அரசியலுக்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை!

மதுரை அழகர்கோவிலில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்களுக்கு கறிவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கடந்த 28-ம் தேதி கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை என ரஜினி தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக மதுரை அழகர்கோவிலில் ரசிகர் மன்றங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. அப்போது ரசிகர்களிடையே பேசிய ராகவா லாரன்ஸ், … Read more

ராகவா லாரன்சின் அரசியல் அறிவிப்பு மேலும் 4 நாட்களுக்கு ஒத்திவைப்பு

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிக பெரிய தீவிர ரசிகனான ராகவா லாரன்ஸ் அவரது அரசியல் பயணம் குறித்த தகவலை நாளை வெளியிடுவதாக இருந்தார்.இந்நிலையில் காஞ்சனா 3 படப்பிடிப்பில் இருந்த அவருக்கு தனது ரசிகர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவர் கடலூருக்கு சென்றுள்ளார்.ஆகையால் அவர் தனது அரசியல் அறிவிப்பை பற்றி வரும் ஜனவரி 7ஆம் தேதி கூறுவதாக அவர் கூறியுள்ளார்.