#BREAKING: தங்கம் வென்றார் பி.வி.சிந்து!

காமன்வெல்த் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார் பிவி சிந்து. காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பி.வி.சிந்து. கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் … Read more

#JustNow: ஆசிய சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்துக்கு வெண்கலம்.. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துக்கு வெண்கலம் பதக்கம். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற காலியிறுதி போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று விளையாடிய இந்திய வீராங்கனை பி.வி சிந்து, சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார். சீன வீராங்கனையை 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில், மிகவும் எதிர்பார்ப்பில்இன்று … Read more

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

ஆசிய பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. காலிறுதியில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார். 2014 ஜிம்சியோன் பதிப்பில் வெண்கலம் வென்ற … Read more

#Badminton:பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி!

கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அன் செயோங்கிடம்,பிவி சிந்து தோல்வி. பால்மா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2022 இன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து,தென் கொரியாவின் அன் செயோங்கை எதிர்கொண்டார். ஆட்டம் தொடக்க முதலே,உலகின் நம்பர் 4 தென் கொரிய வீராங்கனை தனது சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தார்.இறுதியில்,பிவி சிந்து 49 நிமிடங்களில் அரையிறுதி ஆட்டத்தில் 14-21 17-21 … Read more

பிவி சிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நம் அனைவரையும் பிவி சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ள செய்துள்ளார் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட். ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து தலைநகர் பேசல் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் 11-ம் நிலை வீராங்கனையான BUSANAN-ஐ பிவி சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 21 – 16, 21 – 8 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிவி … Read more

சையத் மோடி சர்வதேச போட்டி – சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து!

உலகில் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இறுதி போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளி பதக்கம் வென்றார்.  நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் … Read more

உலக டூர் இறுதிப் போட்டி:வெள்ளிக்கோப்பை வென்ற பி.வி.சிந்து!

இந்தோனேசியா:இன்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிக்கோப்பை வென்றுள்ளார். உலக  பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals)  இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியை பரபரப்பான ஆட்டத்தில் … Read more

ஸ்விஸ் ஓபன்: தோல்வியை சந்தித்த பி.வி.சிந்து.. 9 ஆம் முறை வெற்றிபெற்ற கரோலினா!

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை சந்தித்தார். சஸ்விஸ் ஓபன் பேட்மிட்டன் தொடருக்கான இறுதிப்போட்டி, நேற்று நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை கரோலினா மரினும் மோதினார்கள். இருவருக்கும் இடையிலான இந்த போட்டி, 35 நிமிடங்களிலே முடிந்தது. ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினும், சிந்துவும் மோதிய இந்த இறுதி … Read more

#Factcheck: பேட்மிட்டன் தொடரில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த பி.வி.சிந்து??

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஓய்வு பெறுவதாக வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல. இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களை என்ற சாதனையை படைத்தார். 25 வயதே ஆகும் அவர், டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வந்தது. அதற்க்கு காரணம், தனது ட்விட்டர் பதிவில் உள்ள முதல் பக்கம். அந்த பதிவை பார்த்த சிலர், டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் … Read more

கொரோனா தடுப்பு நிவாரண பணிக்காக நன்கொடை வழங்கிய பி.வி.சிந்து!

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த நோயானது, தற்போது இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து,இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக  பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகிற நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.