Krishnasamy: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக புதிய தமிழகம் கட்சியுடன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக தொகுதி பங்கீட்டு குழு சந்திப்பு நடத்தி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். […]
இன்று தென்காசி மக்களவை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அதில் தென்காசியில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.அதிமுக […]
அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. […]