ஆம் ஆத்மி தன்னார்வாளர்கள் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ ஆக்ஸிமீட்டருடன் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கட்சித் தன்னார்வாளர்கள் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தன்னார்வாளர்கள் மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஒவ்வொரு திசையிலும் வேகமாக பரவுகிறது. பஞ்சாபிலும், கொரோனா அதிகம் பரவியுள்ளது. இப்போது எல்லோரும் ஒன்றாக வந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம் ஆத்மி மக்களுடன் கைகோர்க்கவும், … Read more

தன் செல்போன் பறித்தவனை துரத்தி பிடித்து பொதுமக்களிடம் ஒப்படைத்த 15 வயது சிறுமி.!

தன்னிடம் செல்போன் பறித்தவனிடம் போராடி, தன் செல்போனை மீட்டது மட்டுமல்லாமல், அந்த திருடனை பொதுமக்களிடம் பிடித்துக்கொடுத்துள்ளார் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுமி. கடந்த ஞாயிற்று கிழமை பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் நகரில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது வீட்டிற்கு பிரதான தெருவில் நடந்து சென்றுள்ளாள். அச்சமயம், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த சிறுமியிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி தனது போனை விட்டுக்கொடுக்காமல், செல்போன் பறித்தவனிடம் … Read more

7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு  செப்டம்பர்  13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் … Read more

இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

பஞ்சாபில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை. இன்று அதிகாலை பஞ்சாபின் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பி.எஸ்.எஃப் ரோந்து குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவியவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன. … Read more

பஞ்சாப் கள்ளச்சாராய வழக்கு.! பலி எண்ணிக்கை 84ஆக உயர்வு.!

பஞ்சாபில் நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளசாராயத்தை அருந்தி கடந்த புதன் கிழமை முதல் ஏரளாமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டார்னில் 63 பேர், அமிர்தசரஸில் 12 பேர் மற்றும் குர்தாஸ்பூரில் (படாலா) 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ், படாலா, டர்ன் ஆகிய 3 மாவட்டங்களில் தீவிர சோதனை … Read more

பஞ்சாபின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 64 கிலோ ஹெரோயின் பறிமுதல் .!

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64 கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 64.33 கிலோ எடையுள்ள இந்த ஹெரோயினை 60 துணி பாக்கெட்டுகளாக நீண்ட துணி குழாயில் மறைத்து வைத்து, அதனை ஆற்றில் மதிக்கும் நீர் பதுமரகம் ஒன்றில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை 1500 மீட்டர் நீளமுள்ள … Read more

பப்ஜி கேம் விளையாடுவதற்காக 2 லட்ச ரூபாய் செலவளித்த சிறுவன்.. அதிர்ச்சியில் பெற்றோர்!

பப்ஜி கேம் விளையாடுவதற்காக பஞ்சாபை சேர்ந்த சிறுவன், தனது தாத்தாவின் வங்கிக்கணக்கில் இருந்து 2 லட்ச ருபாய் வரை செலவு செய்தான். உலகளவில் உள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் விளையாடும் கேம், பப்ஜி. பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்தாலும், தற்பொழுது வரை இந்த விளையாட்டை பலரும் விளையாண்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி கேமில் உள்ள துப்பாக்கி ஸ்கின், உடைகள், உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு தனது … Read more

பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல் ! 19 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதிய விபத்தில்  19 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஓன்று சென்று கொண்டிருந்தது.அந்த சமயத்தில் நான்கானா சாகிப் வழிபாட்டு தளத்தில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்தனர்.அப்பொழுது ரயில்வே கிராசிங்கை பேருந்து கடக்கும் போது எதிர்பாராத விதமாக லாகூர் நோக்கி சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் 19 பயணிகள் உயிரிழந்துவிட்டதாகவும்,8 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் … Read more

பஞ்சாபில் ஜூன் 30து வரை ஊரடங்கு தொடரும் ! ஆனால் UNLOCK 1.0 பின்பற்றப்படும்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 30 ம் தேதி வரை தொடரும் என அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்  அறிவித்துள்ளார்.  பஞ்சாப் மாநிலத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கை தொடர வேண்டும் எனவும் மால்கள் ,திரையரங்குகள் திறந்தால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்தது .இந்நிலையில் ஊரடங்கை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் மத்திய அரசு அறிவித்துள்ள 5ம் கட்ட ஊரடங்கின் வழிமுறைகள் அரசு பின்பற்றும் என தெரிவித்துள்ளார் .மத்திய அரசோ இந்த ஊரடங்கை சற்று வித்தியாசமாக … Read more

பஞ்சாப்பில் மிக் – 29 ரக விமானம் விழுந்து நொறுங்கியது.!

பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே மிக் – 29 ரக விமானம்  விழுந்து நொறுங்கியது.  பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள ஒரு விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம்  புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நவன்ஷார் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து நொறுங்கியதாகவும், விமானம்  விழுவதற்கு முன் விமானி குதித்து உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டுகிறது. இன்று காலை இந்த விபத்து நடந்ததாக … Read more