அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கம்…! ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…!

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்.

கடந்த ஜூன் மாதம், அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அவர்களை, அக்கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கி உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, புகழேந்தி அவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது தமது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் செயல்படுவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென்றும் எம்பி எம்எல்ஏக்கள் – கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  எடப்பாடி பழனிசாமி மற்றும்  ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் தமிழகத்தை தேர்வு செய்யப்பட்டது அதிஸ்டவசமானது! நீதிபதி கிருபாகரன் வேதனை!

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் புரிந்த சாதனை குறித்து பலரும் பேசி வந்த நிலையில், இவரது வெற்றி பாராட்டி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர்கள்  கூறுகையில், விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது, அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இனி அமமுக இல்லை,அதிமுகத்தான் ..! முதல்வர் துணை முதல்வர் முன்னிலையில் இணைந்த முக்கிய நிர்வாகி

  • சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் புகழேந்தி.
  • முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக  இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி  இருவருக்கும்  இடையே கருத்து மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

இதனால் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி மாற்றம் செய்யப்பட்டார்.அதாவது கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார்.இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இது குறித்து புகழேந்தி கூறுகையில்,வெளிநாடு சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவேன் என்று  புகழேந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் புகழேந்தி. அங்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.மேலும்  அவரது ஆதரவாளர்களும், அதிமுகவில் இணைந்தனர்.

பன்னீர்செல்வம் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன் – புகழேந்தி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன் என்று  புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது.அதாவது  கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து புகழேந்தி கூறுகையில்,வெளிநாடு சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவேன் என்று  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் – புகழேந்தி

தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்பு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இரண்டு ஆண்டு காலமாக  பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அமமுக-வில் பயணம் செய்தோம்.
தினகரன் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் தொல்லை செய்ய நினைத்தால் எதிர்க்க நான் ஒருவன் போதும்.தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காலியாகிறது தினகரன் கூடாரம் ! நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய புகழேந்தி முடிவு

அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர்.
அமமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி  இருவருக்கும்  இடையே கருத்து மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
இந்த நிலையில் அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து  புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர்.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
 

ஓரங்கட்டப்பட்ட புகழேந்தி! அமமுக செய்தி தொடர்பாளர்களின் புதிய பட்டியல் வெளியீடு!

சில நாட்களுக்கு முன்னர், அமமுக கட்சி பிரமுகர் புகழேந்தி சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று  அமமுக இணையதள பக்கங்களில் வெளியாகி வைரல் ஆனது. அந்த வீடியோவில் புகழேந்தி அவர்கள் பேசும்போது,  டிடிவி தினகரனை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவந்து தமிழ்நாடு முழுக்க தெரிய வைத்தது நாம் தான். என பேசியிருப்பார்.

இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் மிகவும் வைரலானது. டிடிவி தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே அதிருப்தி  நிலவுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், புகழேந்தி கூறும்போது, விரைவில் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது அமமுக  கட்சியின் சார்பாக வெளியான செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் புகழேந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது

புகழேந்தி வீடியோ விவகாரம்: எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்-தினகரன் விளக்கம்

எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன் என்று புகழேந்தி விவகாரம் குறித்து தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம்  அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் புகழேந்தி விளக்கம் அளித்தார்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்தார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்.புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை.

எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து சொந்த விருப்பத்தின் பெயரில் நிர்வாகிகள் செல்கின்றனர்.அதனை துரோகம் என்று சொல்ல மாட்டேன் என்று தெரிவித்தார்.

இவர்கள்தான் இந்த வேலையை செய்தார்கள்-அமமுக ஐ.டி.விங் குழுவால் வேதனைப்படும் புகழேந்தி

என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள் என்று வீடியோ குறித்து புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.

அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.கோவையில் அவரது கட்சினருடன் பேசிய வீடியோவில் ,கட்சியில் யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லை.முகவரி இல்லாத தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்றும் பல போராட்டங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது நான் தான் என்றும் தெரிவித்தார்.இவரது இந்த பேச்சு அமமுக வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக புகழேந்தி விளக்கம் அளிக்கையில்,கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்தது சரியல்ல.இந்த நீக்கம் குறித்து வருத்தப்பட்டேன்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள்.என்னுடைய அறையில் நான் எனது கட்சி நிர்வாகிகளுடன் பேசும் வீடியோவை பதிவு  செய்து,நான்கு சுவருக்குள் நடக்கும் விவகாரத்தை நாடெங்கும் பரப்பியது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.மேலும் யாரையும் கட்சியை விட்டு நீக்காதீர்கள் என்று தினகரனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.