புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி … Read more

தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்?- கேஎஸ் அழகிரி

புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதனிடையே, … Read more

மீண்டும் அதிமுக கொடி பறக்கும்., முதல்வர் மாற்றி பேசியதை நானும் பார்த்தேன் – அமைச்சர் ஜெயக்குமார் வேதனை

முதல் முதலாக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 ஆக குறைந்தது. தற்போது எதிர்கட்சிக்கும் 14 சட்டசபை உறுப்பினர்கள் இருப்பதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. இதனால் பபுதுச்சேரி அரசியல் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சரிடம், புதுச்சேரிக்கு … Read more

மூதாட்டியின் குற்றச்சாட்டு., உல்டாவாக ராகுலிடம் மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி.!

மூதாட்டி கூறிய குற்றசாட்டை மறைத்து, ராகுலிடம் தவறாக மொழிபெயர்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. நேற்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் புதுச்சேரியில் சோலையூர் பகுதி மீனவ மக்களிடம் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, கூட்டத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர், புயல், மழை பாதிப்புகளின் பொது எங்க மக்களை யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் … Read more

புதுச்சேரி வந்தடைந்த தமிழிசை சௌந்தரராஜன்..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி … Read more

மிகுந்த வலியை ஏற்படுத்தியது, ஆனால், எனக்கு எந்த கோவமும், வெறுப்பும் இல்லை – ராகுல் காந்தி

என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களில் மத்தியில் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருநாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் முத்தயாபேட்டையில் மீனவ மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது … Read more

#BREAKING: நாளை புதுச்சேரி ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்கிறார் ..!

நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநாராக பொறுப்பேற்கிறார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி பல குற்றச்சாட்டு இருந்தது. அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில … Read more

#BREAKING: புதுச்சேரியில் அரசியல் குழப்பம் – ராகுல் காந்தி ஆலோசனை.!

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெருமான்மை இல்லாத சூழலில், முதல்வர் நாராயணசாமியுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரியில் அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் மொத்தம் 30 இடங்களில் 19 காங்கிரஸ் கூட்டணி இருந்த நிலையில், தற்போது 14 ஆக குறைந்து, ஆட்சி நீடுக்கமா என்று குழப்பம் நிலவி வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு 14 எம்எல்ஏக்களின் ஆதரவு … Read more

முதல்வர் நாராயணசாமி பெருபான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சியினர் கடிதம்..!

நாராயணசாமி தலைமையிலான காங்கிரசுக்கு இன்னும் மூன்று மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள் அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகிய நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது   புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10-ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் திமுக 3 , ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளும் காங்கிரசின் பலம் 14-ஆக உள்ளது. எதிர்க்கட்சிகள் என்ஆர் காங்கிரஸ்-7, … Read more