அட யாரு இது.. எங்கையோ பாத்தமாதிரி இருக்கு? 10 வருடத்திற்கு பின் வைரலாகும் புகைப்படம்!

2011-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை அர்ஜுன் டெண்டுல்கர், பிருத்வி ஷா மைதானத்தில் பார்த்து ரசித்த புகைப்படம், தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2011 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதியது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, கோப்பையை கைப்பற்றியது. இந்த சம்பவம் நடந்து தற்பொழுது 10 ஆண்டுகள் கடந்தது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் … Read more

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பயிற்சி போட்டியில் பிரித்வி ஷா விலகல்.!

நாளை  நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர். வருகின்ற 17, 19-ம் தேதிகளில் நியூசிலாந்தில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். நாளை  நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர். அங்கு நியூசிலாந்து அணியுடன்  இந்திய “ஏ” அணி 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்திய “ஏ” அணியில்  பிரித்வி ஷா இடம் பெற்றிருந்தார்.ஆனால் பிரித்வி ஷா   தற்போது … Read more

ஊக்க மருந்து பயன்படுத்திய இந்திய வீரர் பிரித்வி ஷா 8 மாதம் விளையாட தடை!

ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் பிரித்வி ஷாவிற்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த  சோதனையில்  தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தன்மையுடைய இருமல் மாத்திரையை பிரித்வி ஷா பயன்படுத்தியது  தெரியவந்தது. இது தொடர்பாக ஜூலை 16-ஆம் தேதி பிரித்வி ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிரித்வி ஷா இந்திய அணியில் மார்ச் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம்  தேதி வரை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் வருங்கால நம்பிக்கையாக  … Read more