மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி புகழாரம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளிற்காக அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், பல்வேறு தலைவர்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில், … Read more

391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி, புகழாரம் சூட்டியுள்ளார். சத்ரபதி சிவாஜி அவர்களின் 391 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மராட்டிய வீரரான சத்ரபதி சிவாஜி அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டி பதிவு ஒன்றையும் பிரதமர் பதிவிட்டுள்ளார். அதில், மா பாரதியின் அழியாத மகன் சத்ரபதி சிவாஜி … Read more

ஆதரவற்றவருக்கு சிறுநீரக தானம் செய்த பெண் – பிரதமர் மோடி பாராட்டு!

ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாக பெண்மணி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, பிரதமர் மோடி அப்பெண்மணிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். 48 வயதுடைய மனோஷி ஹல்தார் எனும் பெண் கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார். இவர் உறுப்பு தானம் குறித்த பிரதமர் மோடி அவர்களின் உரையால் கவரப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு … Read more

விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி கனடா பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை!

கனடா பிரதமர் ஜஸ்டின் உடன் தொலைபேசியில் ஆலோசனை பேசிய பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், விவசாயிகளின் அமைதியான இந்த போராட்டத்திற்கு கனடா எப்பொழுதுமே ஆதரவளிக்கும் எனவும், விவசாயிகளின் போராட்டம் … Read more

இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்பொழுது நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது, 20 க்கும் மேற்பட்ட கட்சியினர் குடியரசு தலைவரின் உரையையும் புறக்கணித்தனர். இந்நிலையில் இதனை அடுத்து இன்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக … Read more

வாழ்த்திலும் தமிழ்நாட்டுக்கு வஞ்சனையா??? மறந்துவிட்டீர்களா..இல்லை மனமில்லையா?? விளாசும் மக்கள்

இன்று மொழி வாரி மாநிலங்கள் உதயமாகி நாள் அந்தந்த மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு தனி மாநிலமாக உதித்த நாளாகும்.  1956 ஆண்டு நவம்பர் 1ந்தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகியது. மெட்ராஸ் பிரெசிடென்சியில்அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதனை அடுத்து  தமிழ்நாடு தனி மாநிலம் உருவாகியதை  “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடப்பட்டு வருகிறது. … Read more

#NationalUnityDay சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் கம்பீர அணிவகுப்பு -பிரதமர் பங்கேற்பு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில்  கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் ‘ராஷ்டிரிய ஏக்தா … Read more

சூரிய ஒளி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை… மோடி பெருமிதம்…

சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் இந்தியா உலகளாவிய சாதனையை படைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார். குஜராத் மாநிலத்தில் வேளாண்மை, மருத்துவம்,  சுற்றுலா ஆகிய துறைகளுக்கான வளர்ச்சித்  திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி  வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, அவர்களின் உற்பத்தி செலவு, சிரமங்களை குறைக்க, காலத்திற்கேற்ப அரசு  அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.நாட்டில் சூரிய மின்சக்தி திட்டத்தை விவரமான கொள்கைகளுடன், பத்து ஆண்டுகளுக்கு … Read more

2வது முறையாக நியூசியில் கர்ஜிக்கும் ஜெசிந்தா..பிரதமர் வாழ்த்து!

நியூசிலாந்தில்இரண்டாவது முறை வெற்றி பெற்றதற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டென்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 % வாக்குகளைப் பெற்றது.மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 2வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள ஜெசிந்தா ஆர்டெனுக்கு பிரதமர் பிரதமர் … Read more

விரிவாக்கம் செய்யப்படும் மத்திய அமைச்சரவை..!வெளியானது தகவல்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2019ல் 2வது முறையாஅக பிரதமராக பதவியேற்றார்.அப்போது கூட்டணி கட்சிகள் சார்பில் 4 அமைச்சர்கள் பதவியேற்றனர்.அவர்களில் சிவசேனா கட்சியின் அரவிந்த் சாவந்த்,சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர்,ஆகியோர் தங்களது பதவியை ராஜினா செய்தனர்.மேலும் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.இதனை அடுத்து இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே தற்போது இணை அமைச்சராக … Read more