வரலாற்றில் இன்று(19.05.2020)… இந்தியாவின் ஆறாவது ஜனாதிபதி பிறந்த தினம் இன்று….

இந்தியாவின் முதல் மற்றும் மூத்த குடிமகனான குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வானவர் ஜனாதிபதி நீலம் சஞ்சீவி ரெட்டி (1977).  இவர் போட்டியிட்ட இந்த தேர்தலில் 37 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மனு சரிபார்த்தலின் போது, இவரை தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடியானது.  மேலும் இவர் லோக்சபா சபாநாயகராக இருந்து, ஜனாதிபதியானவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் மே மாதம்  19 ஆம் நாள்  1913ஆம் ஆண்டு   பிறந்தார்.  இவர் இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இந்த உயரிய பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.