வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!

pongal parisu

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் நாளை வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது. ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி … Read more

ஜனவரி 12ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு

ration shop

பொங்கல் பரிசு தொகுப்பு தருவதற்கு ஏதுவாக ஜனவரி 12ம் தேதி நியாயவிலை கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பணி நாளை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் விடுமுறை வழங்கி அறிவிப்பு வெளியிடப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ஜனவரி 10ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என அறிவித்த நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ … Read more

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு – ஓபிஎஸ் வலியுறுத்தல்

o panneerselvam

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதுவும், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழக … Read more

ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு – தமிழக அரசு அறிவிப்பு

pongal thokuppu

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் நாளை முதல் ஜனவரி 9ம் தேதி … Read more

பொங்கல் பரிசு ரூ.1000 – நாளை முதல் டோக்கன் விநியோகம்!

pongal parisu thogai

இந்தாண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதில், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், ரொக்க பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், விலையில்லா வேட்டி, சேலை ரேஷன் கடைகள் மூலம் … Read more

பொங்கல் பரிசுத்தொகை: யார் யாருக்கு ரூ.1000 கிடையாது?

pongal parisu

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் எனவும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும் இவற்றை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்க்கரை அட்டைதாரர்கள்,  பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு … Read more

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு..!

puducherry pongal gift

புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500 என்றும், இரண்டுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச … Read more

பொங்கல் பண்டிகை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…!

Bus

பொதுவாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இவ்வாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்! போகி பண்டிகைக்கு … Read more

புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி..!

புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.  புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மகளீர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும்  கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், பனை ஓலை பொருட்கள் இடம்பெற்றுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி – அமைச்சர் மெய்யநாதன்

பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.  அமைச்சர் மெய்யநாதன்  அவர்கள், அய்யனார்கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் தொடங்கும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.