பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது – ராமதாஸ்

தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்படுவர்.இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தேவேந்திர குலவேளாளர் கோரிக்கைக்கு நீண்டகாலம் தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது. தேவேந்திர குல … Read more

முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் ?

பாமக நிறுவனர் ராமதாஸ்  முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பாமக சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது.ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இதனால் மூத்த அமைச்சர்கள் , பாமக நிறுவனர் ராமதாஸுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இந்நிலையில் தான் இன்று … Read more

வன்னியர் இடஒதுக்கீடு   – பாமக அரசுடன் இன்று பேச்சுவார்த்தை

வன்னியர் இடஒதுக்கீடு  குறித்து இன்று பாமக அரசுடன் பேச்சுவார்த்தை  நடத்துகிறது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே தான் அண்மையில்  பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் , வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை சென்னையில் சந்தித்து … Read more

உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் ஆளுனர் முடிவெடுக்காதது அநீதி- ராமதாஸ்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் … Read more

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் ! அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த பாமக முடிவு

வன்னியர் இடஒதுக்கீடு  குறித்து பிப்ரவரி 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் அழைப்பு பாமக ஏற்றுள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே தான் இன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் , வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் … Read more

அரசியல் முடிவெடுக்க நாளை கூடுகிறது பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டம்

அரசியல் முடிவெடுக்க நாளை பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை  காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறவிருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் , பா.ம.க இளைஞரணித் தலைவர்  அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் … Read more

அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்! ராமதாஸ்

அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது.உயர்நிலை அறிவியலாளர் பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, … Read more

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் – ராமதாஸ்

தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும்; வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக ஒப்புகைச் சீட்டுகளைத் தான் எண்ண வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ள கருத்துகள் சரியானவை, வரவேற்கத்தக்கவை. கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை. திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள் தேர்தல் … Read more