#Breaking:”தேர்தல் பிஸியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை”- காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்..!

மேற்கு வங்க தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் பிரதமர் மோடிக்கு,கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கொரோனா வைரஸினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.இதற்கு இடையில் கேரளா,தமிழ்நாடு,புதுச்சேரி,அசாம் மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் முடிவடைந்துள்ளன,மேலும் வாக்குப்பதிவானது மே 2 ஆம் தேதியன்று எண்ணப்படும். ஆனால்,மேற்கு வங்கத்தில்,294 … Read more

“ஒவ்வொருவரும்,மற்றொருவரை பாதுகாக்க வேண்டும்”-பிரதமர் மோடி வலியுறுத்தல்.

விஸ்வரூபம் எடுத்துள்ள கொரொனோ பரவலை தடுக்க நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ‘தடுப்பூசி திருவிழா’ தொடங்கியதாக கூறிய பிரதமர் மோடி,கொரொனோ தொற்றுலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மக்களிடம் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி,நாடுமுழுவதும் Covid-19க்கு எதிராக ஏப்ரல் 11 முதல் 14 வரை  தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ‘டிக்கா உட்சவ்’ என்ற தடுப்பூசி திருவிழாவானது,கோவிட் -19 மீதான இரண்டாவது பெரிய போருக்கான ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.அதன்பின்னர் கொரொனோ பரவாமல் இருக்க விதிமுறைகளை கையாள்வது குறித்து மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார், … Read more

“பிரதமர் மோடி தினமும் இந்து-முஸ்லீம் விளையாட்டை விளையாடுகிறார்”-மம்தா பானர்ஜி..!

பிரதமர் மோடிதான் ஓட்டிற்காக தினமும் ‘இந்து-முஸ்லீம்’ விளையாட்டை விளையாடுகிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டல். திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு(TMC) அதிகளவில் வாக்களிக்குமாறு முஸ்லீம் சமூகத்தை வலியுறுத்தியதாகக் கூறப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம்  புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் பெற்ற மம்தா இதுகுறித்து கூறுகையில், “எனக்கு எதிராக 10 நோட்டீஸ் வழங்கப்பட்டாலும் அது … Read more

பிரதமரின் முத்ரா திட்டம்;அனுமதிக்கப்பட்ட 14.96 லட்சம் கோடி கடன்..!

பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 14.96 லட்சம் கோடி வரையிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியால் ஏப்ரல் 8,2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14.96 லட்சம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்திலிருந்து 28.68 கோடிக்கும் அதிகமான கடன்கள் வங்கிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,மேலும் அனைத்து பங்குதாரர்களின் நிதித் தேவைகளும் , பல்வேறு முயற்சிகள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன” என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து … Read more

அரசியல் கட்சி தலைவர்களுடன் ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே நேற்று பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு … Read more

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் இடைவெளி விட்டு இருக்கும் அமைச்சர்கள்!

 டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் இடைவெளி  விட்டு அமர்ந்துள்ளனர்.    உலகம் முழுவதும் கொரோனாவால்  பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவிலும் கொரோனாவின்தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும்  21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.   இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று … Read more

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ! ரூ.73,95,90,000 நிதி முதல்கட்டமாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.தெற்காசிய நாடுகள்  அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது.எனவே  பிரதமர் மோடியில் அழைப்பை ஏற்று தெற்காசிய நாடுகளின்  தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக  இன்று  ஆலோசனை மேற்கொண்டனர்.  இந்நிலையில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு 10 … Read more

பயத்திற்கு NO சொல்லுங்கள் ,முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள் – கொரோனா குறித்து பிரதமர் ட்வீட்

கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா. சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால்  … Read more

அயோத்தி தீர்ப்பு ! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடே எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.அதில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். தீர்ப்பு வெளியான நிலையில்,நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது .என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த … Read more