“புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக பாஜக தொடர்ந்து உழைக்கும்” – பிரதமர் மோடி..!

புதுச்சேரி எம்பியாக செல்வகணபதி அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.கோகுலகிருஷ்ணன் அவர்களின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனால்,புதிய எம்.பி.யைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் 4-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப். 15-ம் தேதி தொடங்கி கடந்த 22-ம் தேதி முடிவடைந்தது. மாநிலத்தின் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு … Read more

அமெரிக்க பயணம் நிறைவு செய்த பிரதமர் மோடி; டெல்லியில் உற்சாக வரவேற்பு ..!

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் 76 வது அமர்வில் உரையாற்றினார்.அதற்கு முன்னதாக குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  ஸ்காட் மோரிசன் உள்ளிட்டவர்களிடம் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது … Read more

வெளியானது..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு – ரூ.22 லட்சம் உயர்வு ..!

பிரதமர் மோடி அவர்களின் சொத்து மதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அடல் பிஹாரி வாஜ்பாயின் காலத்தில், பொது வாழ்க்கையில் அதிக வெளிப்படைத்தன்மைக்காக ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் அனைத்து மத்திய அமைச்சர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை தானாக முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்தது. இந்த அறிவிப்புகள் பொது களத்தில் கிடைக்கின்றன மற்றும் பிரதமரின் இணையதளம் மூலம் அணுகலாம். இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,தனது சொத்து மதிப்பு குறித்த விபரங்களை பொதுமக்கள் பார்வைக்காக  தனது அதிகாரப்பூர்வ … Read more

பல்வேறு கலைப்பொருட்களுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி…!

அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததையடுத்து,பிரதமர் மோடி நேற்று இரவு நியூயார்க்கில் இருந்து இந்தியா புறப்பட்டார். அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.நேற்று இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடி நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் உரையாற்றினார்.அப்போது,கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை,பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, … Read more

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் வரவேற்பு. நன்கு நாட்களுக்கு அரசு முறை சுற்று பயணமாக நேற்று டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு சென்றடைந்தார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ருஸ் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்கா அரசு உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் விமான நிலையத்தில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு … Read more

இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் பிரதமர் மோடி – ஜோ பைடன் சந்திப்பு : வெள்ளை மாளிகை!

செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் சந்திப்பு இரு நட்டு உறவை வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.  செப்டம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்கா புறப்பட உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் … Read more

அக்டோபர் 31க்குள் 50 லட்சம் தடுப்பூசியை வழங்குங்க! – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்துக்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம். அதில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தமிழநாட்டுக்கு இதுவரை போதிய தடுப்பூசிகளை வழங்கி வரும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் தடுப்பூசி போடுவதில் தேசிய … Read more

பிரதமர் மோடியை மதிக்கிறேன்: முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி..!

பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன் என்று முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி தெரிவித்துள்ளார். இரா பாசு தெரிவித்துள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ஊழலில் ஈடுபடுவதாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி இரா பாசு கூறியுள்ளார். மேலும் கூறிய இரா பாசு, பிரதமர் மோடி நல்ல வேலை செய்து வருகிறார். விவசாயிகளால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றாலும், குறிப்பாக ரயில்வே துறையில் … Read more

மத்திய விஸ்டா திட்டம்: புதிய வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி உரை..!

புதிய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி மத்திய விஸ்டா திட்டத்தை குறித்து உரையாற்றினார். இன்று புதுடெல்லியில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை திறந்து வைக்கும் போது, ​​ராணுவ அதிகாரிகளுக்கான புதிய அலுவலகங்களை உள்ளடக்கிய மத்திய விஸ்டா திட்டத்தின் எதிர்ப்பாளர்களை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். கஸ்டூர்பா காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவில் அமைந்துள்ள இரண்டு புதிய பல மாடி அலுவலக வளாகங்களின் துவக்க விழாவில்,” மத்திய விஸ்டா திட்டத்திற்குப் பிறகு மக்கள் வசதியாக அமைதியாக … Read more

உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது;பிரதமருக்கு நன்றி..! – மாநில தலைவர் அண்ணாமலை..!

காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு,தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று,அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை  அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து,பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் … Read more