மருத்துவர்களை பாஜக அரசிடமிருந்து காப்பாற்றுங்கள்-ராகுல் காந்தி..!

மருத்துவர்களை மத்திய பாஜக அரசின் அயோக்கியதனத்திடமிருந்து காப்பாற்றுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நாளிலிருந்து மத்திய பாஜக அரசு தொற்றை கையாளும் விதம் சரியில்லை என்று தனது கருத்துக்களை ராகுல் காந்தி எடுத்து வைத்து வருகிறார். அந்தவகையில், மத்திய பாஜக அரசின் செயல்களை விமர்சித்து சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடிக்கடி தனது கருத்தை பதிவு செய்வார். தற்போது ராகுல் காந்தியின் … Read more

2 வது முறையாக சமூக இடைவெளியை மீறிய பா.ஜா.கா பெண் எம்.பி!

ஒடிசாவின் பா.ஜ.க பெண் எம்.பி சமூக இடைவெளிகளை இதோடு இரண்டாவது முறையாக மீறியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒடிசாவிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியுள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதும், சமூக விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜா.கா பெண் எம்பியும் ஒடிசாவின் மந்திரியுமான அபராஜிதா சாரங்கி என்பவர் பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி … Read more

துப்பாக்கி குண்டு வெடித்து கொரோனாவுக்கு எதிராக விளக்கேற்றிய பா.ஜா.க மகளிரணி தலைவி!

சீனாவில் உருவாகி இருந்தாலும் தற்பொழுது பல நாடுகளை ஆக்கிரமித்து இந்தியாவையும் விட்டுவைக்காமல் பல்லாயிரக் கணக்கானோரை பாதித்துள்ள வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸால் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இந்திய மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், அனைவரும் இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து 9 நிமிடங்கள் விளக்குகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பலர் மின்விளக்குகளை … Read more

கொரோனா கண்டு அச்சம் தேவையில்லை – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை!

பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்தான் தமிழிசை சவுந்தரராஜன். இவர் தற்போது தெலுங்கானாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் தெலுங்கு கற்று வருவதாக அடிக்கடி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்த தமிழிசை, தற்போது தெலுங்கில் பேசியபடி ஒரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா கண்டு அச்சப்பட தேவையில்லை. அதற்கு பதிலாக முகம் மற்றும் கை கவசம் அணிந்து பாதுகாப்பாக வீட்டில் இருந்தால் போதும் என்று தெலுங்கில் பேசி உள்ளார். இதோ அந்த வீடியோ, #StayAtHomeSaveLives protect … Read more