1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்த ரிச்சா கோட் – மன்னிப்பு கேட்ட நடிகை பாயல் கோஷ்!

1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்த ரிச்சா கோட்டிடம், மன்னிப்பு கேட்ட நடிகை பாயல் கோஷ்.

பாலிவுட் நடிகை பாயல் கோஷ் அவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பதாக பட வாய்ப்பு கேட்டு சென்ற பொழுது, இயக்குனர் அனுராக் காஷ்யா அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தன்னுடன் நடிகைகள் ரிச்சா ஹீமார்த் ரோசிஸ் போன்றவர்களும் இதுபோன்ற பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டவர்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கூறிய ரிச்சா பாலியல் குற்றச்சாட்டில் தேவையில்லாமல் தனது பெயரை குறிப்பிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும் இதனால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பாயல் கோஷ் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்டவர்களின் பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வாரம் அவகாசம் கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்த பாயல், மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நிபந்தனையற்ற மன்னிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவதூறான கருத்துக்களை திரும்பப் பெறுவதாகவும், சமூக ஊடகங்களில் பதிவாகி இருக்கக்கூடிய தனது கருத்துக்களை நீக்குவதாகவும், மேற்கொண்டு எந்த ஒரு தவறான கருத்தையும் கூற மாட்டேன் எனவும் உயர் நீதிமன்றத்தில் பாயல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

என்னை கொலை செய்துவிட்டு தற்கொலை என நிரூபிப்பார்கள் – நடிகை பாயல் கோஷ்!

என்னை கொலை செய்துவிட்டு தற்கொலை என நிரூபிப்பார்கள் நடிகை பாயல் கோஷ் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

தேரோடும் வீதியிலே எனும் தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கு பாலியல் தொல்லை இருந்ததாகப் பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது அண்மையில் பாலியல் புகார் கூறிய நடிகை தான் பாயல் கோஷ். இந்நிலையில் இந்த அனுராக் காஷ்யப் எனும் இயக்குனர் இயக்கிய படங்களில் நடித்த மேலும் சில நடிகைகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக குறிப்பிட்டு இருந்தனர், ஆனால் அனுராக் காஷ்யப் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என அந்த நடிகைகள் மறுத்து இருந்தனர். அனுராக் காஷ்யப் தவறாக நடந்தார் என பாயல் புகார் அளித்திருந்த நிலையில், இது குறித்த வழக்குகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. போலீசார் இது தொடர்பான விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் கவர்னர் மற்றும் உள்துறை இணை அமைச்சரை சந்தித்து பாயல் அண்மையில் புகார் அளித்திருந்தார். தற்பொழுது ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ஒய் பிரிவு பாதுகாப்பு நடிகை கங்கானாவுக்கு வழங்கப்பட்டது போல் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்ததுடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தினை டேக் செய்து தனது ட்விட்டர் பதிவில், என்னை இந்தி பட உலக மாஃபியாக்கள் கொலை செய்து விடுவார்கள், ஆனால் அந்த கொலையை தற்கொலை என்று நிருபித்து விடுவார்கள் என கூறியுள்ளார்.

Exit mobile version