பாகிஸ்தான் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. பாகிஸ்தான் -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீரர்கள் தங்களது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். […]
ஆஸ்திரேலியாவுடனான முதல் டி 20 போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது பாகிஸ்தான். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி அபு தாபியில் நேற்று நடைபெற்றது.டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 68 ரன்களில் அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக மொகமது ஹபீஸ் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் […]