அதிமுக அரசின் அவல நிலை!! ரத்த கண்ணீரை வர வைக்கிறது – மு.க.ஸ்டாலின் வேதனை

தமிழகத்தில் தடுப்பூசி விரயமாக்கப்பட்டிருப்பது ரத்த கண்ணீரை வர வைக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகளை வீணடிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் என்ற அவல நிலையை அதிமுக அரசு உருவாகியிருப்பது வேதனை அளிக்கிறது என்றும் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளி நாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் … Read more

பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வாங்குங்கள்…! மத்திய அரசை விளாசிய டெல்லி உயர்நீதிமன்றம்…!

ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு,  திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால் ஆக்சிஜனை கொடுங்கள்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் போராடி வருகிறது. இந்நிலையில் இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நோயின் தாக்கம் ஒருபுறமிருக்க, ஆக்சிஜன் பற்றாக்குறையினாலும் சில நோயாளிகள் உயிரிழந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை … Read more

இன்னும் இரண்டு மணி நேர ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளது – டெல்லி ஸ்டீபன் மருத்துவமனை!

டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் மருத்துவமனையில் இன்னும் இரண்டு மணி நேர ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நாளுக்கு நாள் புதிதாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதால் பல்வேறு … Read more

#BREAKING: 4 நோயாளிகள் உயிரிழப்பு – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நோயாளிகள் உயிரிழப்பு தொடர்பாக நோட்டீஸ். வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நோயாளிகள் இறந்ததாக வெளியான செய்தியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது … Read more

ஆக்சிஜனுக்காக தொழிற்சாலைகள் காத்திருக்கலாம், மனிதர்களால் முடியாது – டெல்லி உயர் நீதிமன்றம்!

தொழிற்சாலைகள் ஆக்சிஜனுக்காக காத்து இருக்கலாம். ஆனால், கொரோனா  நோயாளிகளால் முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மக்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. நாளுக்கு நாள் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளின்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை – மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனராம். கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதிலும் தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடீரென கொரோனா வைரஸின் வீரியம் மீண்டும் அதிகரித்ததால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  நோயாளிகளுக்கு … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு டிரம்புக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது!

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு டிரம்புக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் உலக நாடுகளிலேயே அதிக அளவில் கொரானா வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக அமெரிக்கா தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை அமெரிக்காவில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் ஆலோசகர் … Read more

கொரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையில் ஆக்சிஜன் வசதி!

கொரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையில் ஆக்சிஜன் வசதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில், கழிவறை செல்லும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பதை தவிர்க்க, கழிவறையில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, … Read more

கொரோனா பொதுமுடக்கத்தால் யமுனையில் உயரும் ஆக்சிஜன் அளவு!

கொரோனா பொதுமுடக்கத்தால் யமுனையில் உயரும் ஆக்சிஜன் அளவு. கொரோனா வைரஸின் தீவிர பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் கரைபுரளும் யமுனை நதி தூய்மையாக மாறியுள்ளது. தொழில்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், நதியில் கழிவுகள் கலப்பது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாடா வளர்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி, ஊரடங்கு காரணமாக கங்கை நதியின் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளதாகவும், பிப்ரவரியில் எடுக்கப்பட்ட அளவை விட, ஜூன் மாதத்தில் ஆக்சிஜன் அளவு பெருகியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், யமுனை … Read more

#BREAKING: ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.75.28 கோடியில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 200-க்கும் மேல் உள்ள அரசு மருத்துவமனைகளில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட உள்ளது. அதிலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மருத்துமனையில் ஆக்சிஜன்தேவையின் … Read more