ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனு..! இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!

ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. அதன்படி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தரப்பு தீர்ப்பளித்தது. … Read more

என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் – சசிகலா பேட்டி

பொதுச்செயலாளர் யார் என்பதை கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என சசிகலா பேட்டி. திருவாரூர் மாவட்டத்தில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண்பதற்காக சசிகலா மற்றும் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். என்னை … Read more

உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் – ஓபிஎஸ்

உண்மை தன்மையை விளக்கும் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கும் உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பெரியகுளம் திரும்பும் முன் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள திருமண மஹாலில் தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தியவாறு அரசு நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை … Read more

அதிமுக அலுவலகத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட பொருட்கள் அங்கேயே இருக்கிறது.! சிபிசிஐடி தகவல்.!

காணாமல் போனதாக கூறப்பட்ட வெள்ளி வேல், அதிமுக அலுவலகத்தில் தான் இருக்கிறது என சிபிசிஐடி தகவல் அளித்துள்ளது.  கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தலைமையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழு நடைபெற்ற சமயத்தில் அதிமுக அலுவலகத்தில் ஓர் கலவரமே நடைபெற்றது என்று கூறலாம். அங்குள்ள பொருட்கள் சேதமடைந்தன. ஆவணங்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து, ஓபிஎஸ் ஆதரவாளரும் , முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய பொருட்கள் … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் .! ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் மேல் முறையீடு செய்துள்ளார்.  தமிழக அரசியலில் மிக முக்கிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக தற்போது இரு பிளவாக பிளவு பட்டு இருக்கிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு ஒரு புறம் இபிஎஸ் தரப்பு ஒருபுறம் என இருவரும் கட்சி பிரச்னையை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த … Read more

#Breaking : உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

ஜூலை 11 நடைபெற்ற அதிமுக பொதுகுழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது .  கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வு ஜூலை 11 பொதுக்குழு … Read more

பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…! எப்போது..?

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்.  ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என … Read more

#BREAKING: ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று மாலை ஆலோசனை!

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணைக்கு  வரும் நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை. சென்னையில் உள்ள ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், இன்று மாலை ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கிறார் ஓபிஎஸ்.  

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து.  காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் … Read more

இந்த பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் – ஓபிஎஸ்

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் வேண்டுகோள். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 04-07-2022 காலை … Read more