எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – ஓபிஎஸ் இருக்கையில் மாற்றமில்லை!

OPanneerselvam

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து, மறைந்த முக்கிய பிரமுகர்கள் பிரகாஷ் சிங் பாதல், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனிடையே, சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி.! ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு.!

Panruti Ramachandran says about ADMK - BJP Alliance Party

அதிமுக தலைவர்கள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர் விமர்னங்களை கூறி வந்ததை அடுத்து , அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூடி கலந்தாலோசித்து இனி , அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்றும் , தேசிய அளவிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்தும் அதிமுக விலகுவதாக அறிவித்தது. இந்த முடிவை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்து இருந்தாலும், அடுத்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனை உறுதியாக … Read more

உபரி நீரை தான் தர முடியும்.. உரிய நீரை தர முடியாது.! கர்நாடகாவுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்.!

Former Tamilnadu CM O Pannerselvam

கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டிய விவகாரம் தற்போது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அதிகாரிகள், காவிரி ஒழுங்கற்று வாரியம், உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் தேவைகளை கருத்தில் … Read more

தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு – ஓபிஎஸ்

பழனிசாமி பெயருக்கு எதுவும் மத்திய அரசால் அனுப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு. தொண்டர்கள் மூலம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இடையில் பல்வேறு பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினார் என்றும் ஓபிஎஸ் குற்றசாட்டினார். மேலும், அதிமுகவின் அமைப்பு ரீதியான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் எந்த முடிவை எடுத்திருக்கிறதோ … Read more

அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாநில தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை … Read more

இவர்களை குறித்து ஆலோசிக்கவில்லை! அதிமுக தலைமையில்தான் கூட்டணி – ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் என ஜெயக்குமார் பேட்டி. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளியோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், … Read more

ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைத்துக் கொள்ளக்கூடாது – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு!

ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு. சென்னையில் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் … Read more

ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ்!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் பெயர், கொடி பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து தலைமை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் “இபிஎஸ்”, அதற்கான மருந்து “ஓபிஎஸ்” – மனோஜ் பாண்டியன்

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் பேச்சு. சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய மனோஜ் பாண்டியன், அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் எடப்பாடி பழனிசாமி, அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியிடம் உள்ளது டெண்டர் படை, ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது தொண்டர் படை. ஒத்துவரவில்லை என்றால் எடப்பாடியை ஒழித்துவிட்டு ஒன்றிணைவோம் என மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் … Read more

ஓபிஎஸ் நடத்துவது கட்சி கூட்டம் அல்ல – ஜெயக்குமார் விமர்சனம்

பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை. திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டம் அல்ல என விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் நடத்தும் கம்பெனியில் இயக்குநர்கள் குழு கூட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது. மூத்த அரசியல்வாதியான … Read more