அதிமுகவில் இருந்து மேலும் 8 பேர் நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 7 பேரை நீக்கம் செய்து இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மேலும் 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில்,  சேலம் … Read more

#BREAKING: சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துள்ளார். சசிகலாவை அதிமுகவின் இணைக்க வேண்டும் என ஒருபக்கம் ஆதரவு, மறுபக்கம் எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில், திருச்செந்தூர் சென்றுள்ள சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் சந்தித்து பேசி வருகிறார். இதனிடையே, தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே சசிகலாவை சேர்க்கக்கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பால் மேலும் … Read more

ஒரு பக்கம் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கி மக்களை ஏமாற்றும் திமுக அரசு – ஓபிஎஸ் கண்டனம்

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது.  அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் … Read more

ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் – டிடிவி தினகரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுகவும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன். அமமுக தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை. சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் அதிமுகவின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். தேனி மாவட்ட நிர்வாகிகள் சுயபரிசோதனை செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். … Read more

#BREAKING: நீட் விலகிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் – ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய காட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் … Read more

அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு. அதிமுகவில் இருந்து ராம்குமார் என்பவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கையில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் … Read more

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார் – டிடிவி தினகரன்

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டி. தஞ்சையில் மருது சகோதர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியான கருத்து தான். ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர். அவர், சரியான கருத்தை தான் கூறியுள்ளார். மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார். அதிமுகவை … Read more

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வழக்கில் பெங்களூரு புகழேந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கி அறிக்கை விட்டதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பெங்களூரு புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி … Read more

#BREAKING: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனு தள்ளுபடி – செப்டம்பர் 14ம் தேதி ஆஜராக உத்தரவு!

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மனு தள்ளுபடி. பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் செப்டம்பர் 14ம் தேதி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் … Read more

புளியந்தோப்பு விவகாரம்: “மூவர் கூட்டணியின் முக்கோண ஊழல்” ஓபிஎஸ்-க்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் தொடர்பு – ம.நீ.ம

ஊழலுக்கு ஒத்துழைத்த உயர்மட்ட அரசு அதிகாரிகள் கண்டிக்கப்பட என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோரிக்கை. அந்த அறிக்கையில், நமது மாநிலம், குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தரமற்ற கட்டுமானப் பணிகளால், உச்சபட்ச ஊழலால் ஏழை மக்களின் நம்பிக்கை நொறுங்கிப் போயுள்ளது. உயிராவது மிச்சமாகுமா என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியக் … Read more