10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு.!

இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம். தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஹால்டிக்கெட்டுகளை மாணவர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் என்றும் கூறியுள்ளது. தனி தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் … Read more

இனி ஆதார் போதும் ; உடனே பான் எண் கிடைக்கும்.! கட்டணம் இலவசம்.!

ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் எண் வழங்கும் வசதி, பரிசோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதில், இதுவரை 6,77,680 பான் எண்கள் 10 நிமிடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். ஆதாருக்கு விண்ணப்பம் செய்யவர்களிடம், ஆதார் எண் மற்றும் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் … Read more

இன்று முதல் இந்த மாநிலத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை.!

ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை நடைமுறைக்கு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் 4 கட்டங்களாக தற்போது மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் பெரும்பாலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. சுமார் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக … Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்!

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை – டெல்லி ராஜதானி சிறப்பு ரயில், ஜூன் முதல் இயக்கப்பட உள்ள நிலையில், ரயில்களுக்கான முன்பதிவு நேற்றே  ஐஆர்சிடிசி இணையத்தில் தொடங்கப்பட்டது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இதில் பயண சீட்டு எடுக்க மட்டுமே முடியும். பயண சீட்டை ரத்து செய்தல், பணம் திரும்ப பெறுதல் போன்றவை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் … Read more

மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுக்கடைகள் மற்றும் பான் மசாலா கடைகள் திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மதுக்கடைகளை திறப்பது … Read more

“லைசன்ஸ் கட்டணம்”ஆன்-லைனில் செலுத்துங்கள் வருகிறது புது ரூல்…!!!லஞ்சத்துக்கு ஆப்பு..!!

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி வரும் அக்டோபர் 1முதல் நடைமுறைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 1 ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் இனி ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி தொடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும்https://parivahan.gov.in/parivahan/ என்கிற இணையத்தளத்தில் ஓட்டுநர் உரிமம் வேண்டியவர்கள்  விண்ணப்பித்துக் கட்டணத்தை வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு … Read more

மகாராஷ்டிர அரசு ஆய்வு!

ஆன்லைன் லாட்டரி  தொடங்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் லாட்டரி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 132கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதில் 125கோடி ரூபாய் பிற மாநில லாட்டரி மூலம் பெறப்படும் வரியாகும். அரசுக்குச் சொந்தமான லாட்டரி மூலம் 7கோடி ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தைப் போல் மகாராஷ்டிரத்திலும் ஆன்லைன் லாட்டரி தொடங்குவது பற்றி ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாக அரசின் முதன்மைச் செயலாளர் … Read more