ஒடிசா சென்ற சிறப்பு ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி.!

தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஒடிசா சென்ற இளம் கர்ப்பிணிக்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.  தற்போது ஊரடங்கு காரணமாக ரயில் பொது போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.  அதன் படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நிறைமாத இளம் கர்ப்பிணி பெண் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு … Read more

மீண்டும் ஒரு ‘சூப்பர்’ புயல்.! தாங்குமா இந்த இரு மாநிலங்களும்?!

ஆம்பன் புயல் சூப்பர் புயல் போல வலுப்பெற்று வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் மே 20 ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. சராசரியாக 155-165 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 185 கிமீ வேகத்திலும் கரையை கடக்கும் 21 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் கடலில் உருவான சூப்பர் புயல் பல்லாயிரக்காணோர் உயிரை காவு வாங்கி இருந்தது. அந்த சூப்பர் புயல் ஒடிசா கடற்கரையில் சுமார் 200 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. தொடர்ந்து 36 மணிநேரம் இந்த … Read more

அதி தீவிர புயலாக உருவெடுத்தது ஆம்பன் புயல்! கனமழைக்கு வாய்ப்பு!

அதி தீவிர புயலாக உருவெடுத்தது ஆம்பன் புயல். வங்க கடலில் உருவாகிய ஆம்பன் புயலானது, அதி தீவிர புயலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை மாலை இது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை நிலவரப்படி, ஒடிசாவின் பாரா தீர்ப்புக்கு, தெற்கே 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஆம்பன் புயல் நாளை மறுநாள் மாலை, மேற்குவங்கத்தில் திக்கா மற்றும் வாங்க … Read more

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்.! – கோரிக்கை விடுத்த மாநில அரசுகள்.!

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முழுஊரடங்கை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமருடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் 19 நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்தார். இந்நிலையில் இன்று … Read more

முழு ஊரடங்கு.! மருந்துகடைகள் கூட 48 மணிநேரத்திற்கு இந்த ஊரில் திறக்க அனுமதியில்லை.!

இந்தியா முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சமயத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துக்கடை, மளிகை, காய்கறி, உணவகம் ஆகியவை மட்டும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு திறக்க அனுமதி வழங்கப்பட்டது.  மக்கள் அன்றாட அத்தியவசிய தேவைகளை காரணம் காட்டி பலர் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த, ஒடிசா அரசு, புவனேசுவரம் மற்றும் பத்ராக் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரையில் 48 மணிநேரத்திற்கு முழு … Read more

புதிய வாகன சட்டத்திருத்தம்! நாகலாந்து லாரிக்கு 6.5 லட்சம் அபராதம் விதித்த ஒடிசா அரசு!

புதிய வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பலர் ஆயிரக்கணக்கான ருபாய் மதிப்பில் அபராதம் கட்டி வருவதை பார்த்து வருகின்றோம். சிலருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. தற்போது அதனை மிஞ்சும் வகையில் ஒடிசா மாநில அரசு நாகாலாந்தை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சரக்கு வாகனத்தில், ஆட்களை ஏற்றியது, காற்று மாசுபடுத்தியது, ஒலி மாசுபாடு போன்ற  விதிகளை மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாணவர்களை கவர்ந்திழுத்த டான்சிங் சார்! இந்த வாத்தியாரிடம் அப்படி என்ன திறமை உள்ளது!

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம், லம்தாபுத் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரபுல்லா குமார் பதி பணி புரிகிறார். இந்த தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் புதிய யுக்தியை கையாள்கிறார். இந்த தலைமை ஆசிரியர் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு படங்களை கற்பிக்கிறார். இவரது இந்த செயல் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. … Read more

தனது ஓராண்டு சம்பளத்தை ஃபானி புயலுக்காக நிதியுதவியாக அளித்த முதலமைச்சர்!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமையன்று கரையை கடந்தது. இந்த புயல் மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஒடிசா புரி பகுதியை மிகவும் பாதித்தது. பலர் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பார்வையிட்டு, மத்திய அரசு சார்பில் 1000 கோடி ருபாய் நிதி ஒடிசா மக்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களால் ஆன உதவிகளை … Read more

1000 கோடி! ஃபானி புயல் பாதித்த ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசு அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வெள்ளிக்கிழமை அன்று கரையை கடந்தது. கரையை கடக்கும் போது, ஒடிசாவில் புரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவிற்கு மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் புயல் அடித்து சுற்று வட்டார பகுதியை சூறையாடியது. இந்த பலத்த சேதத்தையும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடவும் பிரதமர் நரேந்திர மோடி, பார்வையிட ஒடிசா வந்தடைந்தார்.அவரை ஒடிசா ஆளுநர், முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர். பிறகு தனி ஹெலிகாப்டர் … Read more

இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் ! வித்தியாசமான முறையில் தனது அனுதாபத்தை தெரிவித்த சிற்ப கலைஞர்

இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த சிற்பத்தில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் … Read more