பல விருதுகளை வென்ற பிரபல பாடகி இசையமைக்கும் முதல் படம் இதோ!

ஆர்.ஜே.பிக்சர்ஸ் மற்றும் ரன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். நீட் தீர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகும் படம். அனிதாவாக பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார். அவரது தந்தையாக ராஜ கணபதி நடிக்கிறார். எஸ்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.அஜய் இயக்குகிறார். “எனக்கு இசை அமைப்பில் ஆர்வம் இல்லை, படக்குழுவினர் வற்புறுத்தி கேட்டதாலும், படத்தின் கதை என்னை நெகிழ வைத்ததாலும் இசை அமைக்க ஒப்புக் கொண்டேன்” … Read more

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு அதிமுகவின் இணையதளத்தில் வெளியீடு

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்த இலவச கையேட்டை http://www.ammakalviyagam.in  என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அம்மா கல்வியகம் சார்பில், நீட் போட்டித்தேர்வுக்கான இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்க…!!

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்துவிட்டது  என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நீட் உட்பட எந்தவொரு தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை;உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் கட்டாயம் என்கிற மத்திய கல்வி வாரியம் விதித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 2018ம் ஆண்டு மாணவர்கள் எழுத போகும் நீட் தேர்விற்கு ஆதார் எண் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக காட்டவேண்டும் என்றும் மத்திய அரசின் உயர் கல்வி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மேலும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், … Read more

ஜி.வி.பிரகாஷ்குமார் நெகிழ்ச்சி !எங்கள் ஆருயிர் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள நிலையில் சமூகத்தில் வரும் ஏற்படும் நிலைகளை  அதிக அளவில் அக்கறை காட்டி வருகிறார்.   தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக பிசியாக இருக்கிறார். இவர் கதிராமங்கலம்,ஜல்லிக்கட்டு ,ஒகி புயல் என பல புரட்சிகளில் அவரின் குரல் ஒலித்தது. அதே நேரத்தில் டாக்டர் அனிதாவின் விசயத்தில் குரல் கொடுத்தார். இந்நிலையில் தற்போது இன்று அனிதாவின் 18வது பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ் தன் டிவிட்டரில் டாக்டர் அனிதாவிற்கு பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் ஆருயிர் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று … Read more

11 மொழிகளில் நீட் பொதுத் தேர்வு நடத்தப்படும்!

மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நீட் பொதுநுழைவுத் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும் என  தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடப்பு ஆண்டில் உருது மொழியிலும் கேள்வித்தாள் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்டங்களான என்.சி.இ.ஆர்.டி. சி.பி.எஸ்.இ. … Read more

நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் வினாக்கள் கேட்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவிப்பு…!!

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும்.நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தகவல் தெரிவித்துள்ளது. நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் நடத்தப்படும் எனவும் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படவில்லை என சிபிஎஸ்இ கடந்த 22ஆம் தேதிகளில் திட்டவட்டமாக அறிவிப்பு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 மே., 6ல் நீட் தேர்வு நடைபெறும் – சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

  வருகிற மே மாதம் 6ம் தேதி எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை தவிற்த்து, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீட் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வருகிற மே மாதம் 6ம் தேதி எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை தவிற்த்து, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் நீட் தேர்வுகளை, மத்திய கல்வி … Read more

நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மாநில பாடத்திட்டத்திற்கு இடமில்லையாம்….!!!

நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் நடத்தப்படும் எனவும் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படவில்லை.. – என சிபிஎஸ்இ திட்டவட்டமாக அறிவிப்பு செய்துள்ளது. கடந்த வருடம் நடந்த நீட் தேர்வில் பெரும்பாலான வினாக்கள் யாவும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு கடினமாக இருந்தன.இதனால் தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாணவி அனிதா தனது தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். அதனால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல இடங்களில் … Read more

நீட் தேர்வு வேண்டாம்; ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை, ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்தமுறை 1100க்கும் மேல் மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு தோல்வியடைந்ததால் அரியலூர் அனிதா என்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி உயிரிழந்தார்.இதனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை கோரி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு … Read more