நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? – மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,ஏழை – எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு எதிரான நீட் தேர்வு முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்பதிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பின்பற்றியவாறு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையிலும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு … Read more

ஜேஇஇ தேர்வு ஆன்லைனில் எழுத வாய்ப்பளித்தது போல நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.!

வெளிநாட்டிலுள்ள ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பளித்தது,போல  நீட் தேர்வு எழுத வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாணவர்கள் தங்களது படிப்புகளை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அடுத்தமாதம் நீட் மற்றும்  ஜேஇஇ தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்பொழுது ஜேஇஇ தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய கிழக்காசிய நாடுகளில் வசிக்கக்கூடிய நான்காயிரம் இந்திய மாணவர்களுக்கு … Read more

“கொரோனா கட்டுக்குள் வரும்வரை நீட், JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்”- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

“கொரோனா கட்டுக்குள் வரும்வரை நீட், JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்”  என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நீட் மற்றும் JEE-2020 தேர்வுகளை ஒத்தி வைக்கக்கோரி, மத்திய கல்வித்துறை அமைச்சர்   ரமேஷ் பொக்ரியாலுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,  தாங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 2020-ஆம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்களை, உடனடியாக … Read more

நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி..பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்.!

செப்டம்பர் 13 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வும்,  செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரைஜே.இ.இ மெயின் தேர்வும், செப்டம்பர் 27 ஆம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பல இந்த தேர்வுகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி … Read more

இந்த வருடத்தில் நடக்கவிருந்த NEET மற்றும் JEE தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்!

இந்த வருடத்தில் நடக்கவிருந்த NEET மற்றும் JEE தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ ஆகிய தேர்வுகள் இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை … Read more

நீட், ஜே.இ.இ தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் – மத்திய அரசு திட்டவட்டம் ..!

ஜே.இ.இ  தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி நடைபெறும் எனவும்,  நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13 -ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் முதன்மை பொறியியல் மற்றும் மருத்துவப் பள்ளிகளில் சேருவதற்காக நடத்தப்படும் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளின் தேதிகள் மாணவர்களின் கோரிக்கை வைத்த நிலையில் இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்று ஊடகங்களில் செய்தி எழுந்த நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி JEE … Read more

கோவையில் நடந்த சோகம்.. NEET தேர்வு பயத்தால் 19 வயது மாணவி தற்கொலை.!

கோவையை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் சுபஸ்ரீ( 19) இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வைத்துள்ளார். சுபஸ்ரீ கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். அதில், அவர் தோல்வி அடைந்தார். பின்னர், மருத்துவ படிப்பில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

#BreakingNews : நீட் ,ஜே.இ.இ தேர்வுகள் கட்டாயம் ! மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு  செப்டம்பர்  13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் … Read more

நீட் தேர்வு முறைகேடு.. உதித் சூர்யா உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு.!

கடந்த ஆண்டு நீட் தேர்வில் மோசடி விகாரத்தில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உதித் சூர்யா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கல்லூரியில் படிக்க உள்ளதால், தனது உண்மைச் சான்றிதழ்களான 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றுதழ், சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களும், நடுவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தனது  எதிர்காலத்தைக் கருதி  உண்மைச்சான்றிதழ்களை … Read more

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய மனு! உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்! உச்ச நீதிமன்றம்அனுமதி!

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய மனு. மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு எழுதும் நடைமுறை அமலில் உள்ள நிலையில், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் போதிய இடங்கள் கிடைப்பது இல்லை என்றும், இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்றும் குற்றசாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. … Read more