பாராலிம்பிக்:அவனி லெகாராவால் மீண்டும் ஒலித்த இந்திய தேசிய கீதம் – நீரஜ் சோப்ரா வாழ்த்து…!

அவனி லெகாரா தங்கம் வென்றதன் காரணமாக பாராலிம்பிக் பதக்க நிகழ்வில் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலம் வென்றது. இதனையடுத்து,இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில்,பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் … Read more

நீரஜ் சோப்ராவுக்கு உடல்நலக்குறைவு..!

ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய நாட்டிற்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. வரலாற்று சாதனை படைத்த தங்க மகன் ஒலிம்பிக் போட்டி முடிந்து கடந்த திங்கள் கிழமை அன்று நாடு திரும்பினார். இந்திய நாட்டிற்கு திரும்பிய பிறகு பல்வேறு பாராட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். திடீரென கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு … Read more

உலகளவில் இரண்டாம் இடம் பிடித்த ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உலகளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று, 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றார்.  இவருடைய இந்த சாதனையை உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் கூட இதுவரை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவை கௌரவிக்க, இந்திய தடகள சங்கம் முக்கிய அறிவிப்பு..!

ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவை கௌரவிக்க,அவர் தங்கம் வென்ற நாளான ஆகஸ்ட் 7 ஆம் தேதியை ‘ஈட்டி எறிதல் நாள்’ என்று பெயரிட இந்திய தடகள சங்கம் முடிவு செய்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று, 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றார். இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.அதுமட்டுமல்லாமல்,டோக்கியோ ஒலிம்பிக்கில் … Read more

நீரஜ் ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம்;ஆனால் நான் இன்னும் பயப்படுகிறேன்? – தேஜஸ்வின்..!

நீரஜ் சோப்ரா ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம் ஆனால் அவருடன் ஒரு அறையைப் பகிர நான் இன்னும் பயப்படுகிறேன் என்று தேஜஸ்வின் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்ததன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த … Read more

“கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கம்;நீரஜ் சோப்ராவின் ஒற்றை ஒலிம்பிக் தங்கம்” – கவிஞர் வைரமுத்து..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ராவிற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை நேற்று வென்றுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இவ்வாறு,உலக அரங்கில் … Read more

7 பதக்கங்கள் – டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியா..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.  ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா ஒரு தங்க பதக்கம் உட்பட 7 பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களை இந்தியா பெற்றது. இதன் பின்னர் ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்றது. அதில் ஒன்று வெள்ளி, மற்றொன்று வெண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம் உட்பட 7 … Read more

ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம்;உயரத்தில் பறக்கும் மூவர்ண கொடி – வீடியோ உள்ளே …!.!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.அதன்படி,இன்று மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். … Read more

“தடைகளை உடைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார் நீரஜ் சோப்ரா” – குடியரசு தலைவர் வாழ்த்து..!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம், தடைகளை உடைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார் நீரஜ் சோப்ரா என்று குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ஆண்கள் ஈட்டி எறிதல் தடகள இறுதிப்போட்டியில், நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கத்தில் முதல் சுற்றில் 87.03 மீ தூரமும்,இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ … Read more

#BREAKING : நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி பரிசுத்தொகை ..,ஹரியானா அரசு அறிவிப்பு..!

தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கும்  ரூ.6 கோடி என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கும் 6 கோடி பரிசுத் தொகையை ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கிரேடு 1 இல் அரசு பணியும் வழங்கப்படும் எனவும் பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பான மையத்தை நாங்கள் உருவாக்குவோம். அங்கு அவர் விரும்பினால் அவர் தலைவராக இருப்பார் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்:ஈட்டி எறிதலில் தங்கம் … Read more