4 மாத ஊதியத்தை முன்பணமாக அளிக்க உத்தரவிட்ட ஒடிசா அரசு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தாக்குதலுக்கு இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளபட்டுள்ளது.  இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றானது மாநில பேரிடராக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியத்தை முன்பணமாக அளிக்க … Read more

ஒடிசா முதலமைச்சர் வீட்டில் விருந்து ! அமித் ஷா ,நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி பங்கேற்பு

முதலமைச்சர் நவீன் பட்நாயக்  இல்லத்தில் நடைபெக்டர் விருந்தில் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், நிதீஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.  கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். … Read more

நவீன்பட்நாயக் உடன் கமல் சந்திப்பு

ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கு இடையில் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசாவின் செஞ்சூரியன் பல்கலைக் கழகம் சார்பில் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.இதனை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்குகிறார்.இதனையொட்டி கமல்ஹாசன் புவேனஸ்வரில் உள்ள நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.மேலும் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து … Read more

வாகனம் தராததால் இறந்தவரின் உடலை சுமந்து சென்ற குடும்பத்தினர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

மருத்துவமனை நிர்வாகம் வாகனம் தராததால் இறந்த ஒருவரின் உடலை குடும்பமே சுமந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷா மாநிலம்  காளஹந்தி மாவட்டம் குரும்பூர் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை மருத்துவமனையில் நிகிடி மக்ஜி என்பவர் கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகதிடம் அவரது உறவினர்கள் வாகனம் கேட்டுள்ளார். இதற்க்கு அந்த நிர்வாகம் வாகனம் … Read more

“ஒடிசாவை நாங்க பார்த்துக்குரோம் பெட்ரோல்,டீசல் விலைய நீங்க பாருங்க”போட்டு தாக்கிய முதல்வர்…!!

ஒடிசா முதல்வர் நவீன் பட்டநாயக் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதில் ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் ,சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே அங்கு தனது தேர்தல் ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இடங்களில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ஒடிசா அரசையும், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பேசும் போது, ஒடிசாவில் அரசு பணிகளை செய்வதற்கு … Read more

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலை வெளியீடு…!!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முதல்வராக இரு முறை பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலையை இந்திய அஞ்சல்துறை நேற்று அவருடைய பிறந்த தினத்தில் வெளியிட்டது. ஒடிஸா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய அஞ்சல் துறை செயலாளர் தபால்தலையை வெளியிட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெற்றுக் கொண்டார்.