#BREAKING: முதல் நாளிலேயே அதிரடி., பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு.!

புதுச்சேரியில் பெருபான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் தமிழிசையை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவி ராஜினாமா செய்ததால், தற்போது காங்கிரஸ் கூட்டணி சட்டசபையில் 14 ஆக உள்ளது. எதிர்க்கட்சி தரப்பிலும் … Read more

புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி … Read more

மூதாட்டியின் குற்றச்சாட்டு., உல்டாவாக ராகுலிடம் மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி.!

மூதாட்டி கூறிய குற்றசாட்டை மறைத்து, ராகுலிடம் தவறாக மொழிபெயர்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. நேற்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் புதுச்சேரியில் சோலையூர் பகுதி மீனவ மக்களிடம் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, கூட்டத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர், புயல், மழை பாதிப்புகளின் பொது எங்க மக்களை யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் … Read more

இன்று துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கிறார் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன்…!

தெலுங்கானா கவர்னராக பதவி வகிக்கும், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில், புதுவையின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.  புதுச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், துணைநிலை ஆளுநரை மாற்ற வேண்டும் என நாராயணசாமி அவர்கள் தெரிவித்து வந்தார். இதனை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கிரண்பேடியை … Read more

#BREAKING: புதுச்சேரியில் அரசியல் குழப்பம் – ராகுல் காந்தி ஆலோசனை.!

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெருமான்மை இல்லாத சூழலில், முதல்வர் நாராயணசாமியுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரியில் அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் மொத்தம் 30 இடங்களில் 19 காங்கிரஸ் கூட்டணி இருந்த நிலையில், தற்போது 14 ஆக குறைந்து, ஆட்சி நீடுக்கமா என்று குழப்பம் நிலவி வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு 14 எம்எல்ஏக்களின் ஆதரவு … Read more

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி பலம் 19 ஆக இருந்த நிலையில், பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. தற்போது, 4 பேர் அடுத்தடுத்து … Read more

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி அவர்கள் துவங்கி வைத்தார். முதல் கொரோனா தடுப்பூசி, மருத்துவ பணியாளர் முனுசாமி அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி அவர்கள் துவங்கி வைத்தார். புதுச்சேரியில், முதல் கொரோனா தடுப்பூசி, … Read more

மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது – முதல்வர் எச்சரிக்கை.!

மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியதை பரிசீலிக்க வேண்டும் என்று கூறி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்று எழுந்தியிருந்தார். … Read more

புத்தாண்டுக்கு புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் அனுமதி!

வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் வீரியமுள்ள கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் இருந்தாலும், மக்களுக்காக அரசு அவ்வப்போது சில … Read more

ஆன்லைன் ரம்மி-யை தடை செய்ய மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கடிதம்.!

இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். அதிலும், குறிப்பாக இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தியாவில் பப்ஜி-க்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகி வந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்தது. தற்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி, இந்த விளையாட்டல் பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் என பல தரப்பினர் … Read more