முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த காதல் ஜோடிகள்!

முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த மைனா மற்றும் யோகேஸ்வரன்.

சின்னத்திரையில் நடித்து அதன் பின் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்த நடிகை தான் மைனா நந்தினி. இவர் ஏற்கனவே கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் கார்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நந்தினி அவரது பல நாள் நண்பனாகிய யோகேஷ் என்பவரை கடந்த வருடம் இதே நாளில் திருமணம் செய்துகொண்டார், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக அழகியல் ஆண் குழந்தைக்குள் இவர்கள் பெற்றோராகினார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்நாளில் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

மைனா நந்தினியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் மைனா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் நந்தினி.
இவர் தனது இணைய தள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Thank you soo much got lovely dress @elegant_thingss_

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

அட நம்ம மைனாவா இது? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே!

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து, தற்போது திரைப்படங்களில் கதநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளவர் தான் மைனா நந்தினி. இவர் எப்பொழுதும் தனது இணையதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

தற்பொழுதும் பாரம்பரியமான புடவை அணிந்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

❤️????❤️???? blouse from @jdesigners30

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

பல இடையூறுகளுக்கு பின் எளிமையாய் நடந்தது போராளி “நந்தினி” திருமணம்!

மது ஒழிப்புக்கு எதிராக தனி ஒருவராய் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த போராளி நந்தினி அவர்களது திருமணம் இன்று எளிமையாய் நடந்து முடிந்தது. நந்தினி – குணா ஜோதிபாசு இவர்களது திருமணம் மதுரை அருகே தென்னமல்லூரில் உள்ள கோவிலில் வைத்து இன்று நடந்தது.

2014 ஆண்டு முதல் தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராடி வருபவர் நந்தினி. இதுவரையில் பல போராட்டங்களை தனி ஒருவராய் நடத்தி வந்த இவர் மீது காவல் துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில், ஒரு வழக்கு கடந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது “மது போதை பொருளா இல்லையா ? போதை பொருளாய் இருந்தால் அரசு விற்பனை செய்வது குற்றம் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார்” இதனை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா.

இதனால்,கடந்த 5ம் தேதி நந்தினிக்கு திருமணம் நடத்த இருந்த நிகழ்வு தடைபட்டது. ஜாமின் பெற எவ்வளவு முயற்சித்தும் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. நேற்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமின் வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஜாமினில் வெளிவந்த நந்தினி இன்றைய தினம் மிகவும் எளிமையாய் தம் குலதெய்வ கோவிலில் வைத்து குணா ஜோதிபாசுவை திருமணம் செய்துகொண்டார்.

நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன்

மதுரை சிறையில் இருக்கும் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த போது நந்தினி  மதுக்கடைக்கு எதிராக   போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 27 ம் தேதி நீதிபதி சாமுண்டீஸ்வரி முன்னாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் சாட்சிகள் ஆதாரம் என்று கூறி நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்

மேலும் இந்த வழக்கு  விசாரணை  மீண்டும் வரும் 9 ம் தேதி(இன்று ) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் நந்தினிக்கு ஜூலை 5-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரும், அவரது தந்தையும் சிறையில் இருந்ததால் திருமணம் தேதி மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாமுண்டீஸ்வரி , இன்றைய விசாரணையில் நந்தினி, அவரது தந்தை ஆனந்தனுக்கு சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக தெரிவித்தார்.

 

 

சிறையில் இருக்கும் அக்கா நந்தினிக்காக போராட துவங்கும் தங்கை நிரஞ்சனா!

மதுவுக்கு எதிராக போராடி வரும் போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி நந்தினியின் தங்கை இன்று போராடாட்டத்தை துவங்குகிறார்.

மதுரை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிரஞ்சனா ஆனந்தன் அவர்கள் நாளை காலை  சட்டக்கல்லூரி வாயில் முன் போராட்டத்தை துவங்க உள்ளார். நந்தினி அவரது தந்தை இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்காமல் இழுத்து அடுத்துவரும் நிலையில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

நந்தினிக்கு கடந்த 5ம் தேதி குணா என்பவருடன் திருமணம் நடக்க இருந்த  நிலையில், ஜாமின் கிடைக்காததால் திருமணம் நடைபெறவில்லை. இந்த வழக்கு விசாரனை மீண்டும் வரும் 9 ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் வருகிறது.

"Release Nandhini " என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்!

சமூக போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி “Release Nandhini “ என்ற ட்விட்டர் பதிவானது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
சமூகத்தில் இருக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும் தொடர்ந்து தன் தந்தையுடன் குரல் கொடுத்து வருபவர்.
மதுரையில் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த போது மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அதிகாரிகளை தாக்கியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டு தொடுக்கப்பட்ட அந்த வழக்கானது சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த புதன் கிழமையில் விசாரணைக்கு வந்த வழக்கில், சாட்சியாக இருவர் இருந்துள்ளனர். இறுதியாக, நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரை சிறையில் அடைக்க நீதிபதி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார்.
 

ஜூலை 5 ம் தேதி போராளி நந்தினி அவர்களுக்கு குணா என்பவருடன் திருமணம் நடக்க இருக்கும் சூழ்நிலையில் திட்டமிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் வருகிறாளா..? நந்தினி..!நந்தினி2 பற்றிய அப்டேட்..!!

சினிமாவில் எப்படி படங்கள் முக்கியத்துவம் பெறுகிறதோ அதனை போலவே டிவி சேனல்களில் சீரியல் முக்கியத்துவம் பெறுகிறது. இல்லத்தரசிகளின் இன்றைய கால ஃப்வர்ட்டாக உள்ளது என்றே சொல்லலாம்.
அப்படி எல்லா சீரியல்களும் எல்லா சேனல்களிலும் விறுவிறுப்பாக இருக்கும். அப்படி மக்களால் அதிகம் பார்க்கப்படுகிற சீரியல் படு வைரலாக பார்க்கப்படும் அதில் நடித்தவர்களும் பிரபலமாக மக்களாக கொண்டாடப்படுவர் அதனைப் போலவே சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி  வந்த நந்தினி சீரியல் தற்போது முடிந்த நிலையில் இதனின் இரண்டாம் பாகம் வருமா வராதா என்று பலரும் கேள்விகேட்டு வருகிறார்களாம்.
இந்நிலையில் இந்த கேள்விப்பவர்கள் இந்த சீரியலின் தயாரிப்பாளரான நடிகை குஷ்புவிடம் கேட்க அதற்கு அவர் இப்போதைக்கு இல்லை ஆனால் நாளைக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது என பதிவிட்டு பதிலளித்துள்ளார்.