நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனியில் மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை.

இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் வரும் 07.05.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது – சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது என சரத்குமார் தெரிவித்துள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரனின் கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில்,  இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான  நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.

இந்நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்ததாக கூறி, விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. எதிர்ப்புகள் எழுந்தாலும், விஐய் சேதுபதிக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

 அந்த வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்கள் இதுகுறித்து கூறுக்கையில், ‘கலைத்துறையில் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல என்றும், சாதாரண மனிதன் பல போராட்டத்திற்கு பின், எப்படி உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதையை வரவேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில், அரசியல் ரீதியாக தலையிட்டு எதிர்ப்பது முறையற்றது என்றும், இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு  தெரிவித்தால், கலைத்துறை சுதந்திரத்துடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.’ என தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான  நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.

இந்நிலையில், முரளிதரன் இனப்படுகொலையின் போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால், விஜய் சேதுபதி இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு,  பிரபலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதற்கு பதிலளித்த அவர், ‘இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் முடிவு என்று தெரிவித்துள்ளார்.

முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மறுத்த இளம் பாடகர் – யார் தெரியுமா?

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் இளமை பருவ கட்சிகளில் நடிக்க ஒரு இளம் பாடகருக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இறுதியில் அவர் நடிக்கவில்லை காரணம்? வாங்க பார்ப்போம்.

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காரணம், முத்தையா தமிழனாக இருந்தாலும் தன்னை முதலில் சிங்களன் என்று தான் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், முரளிதரன் இலங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர் .

இதற்கிடையில், முத்தையா முரளிதரன் படத்தில் அவரது இளமை பருவத்தில் நடிக்க பாடகர் டீஜேவிற்கு முதலில் வாய்ப்பு கிடைத்தாம். ஆனால் தான் ஒரு ஈழத் தமிழன் என்பதால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய் சேதுபதி?!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கட்சி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், துக்ளக் தர்பார் என பல படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி தெரிந்தவுடன் பல எதிர்ப்புகள் கிளம்பின. முத்தையா முரளிதரன் இலங்கை தமிழருக்கு எதிராக செயல்பட்டவர் என கூறிவந்தனர். இந்த தகவல்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவிக்கப்பட்டதா என தெரியவில்லை.

ஆனால் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கொடுத்திருந்த தேதிகளை துக்ளக் தர்பார் படத்திற்கு கொடுத்துவிட்டாராம். அதனால் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என கூறப்பட்டு வருகிறது.

Exit mobile version