மீனவர் தின ஸ்பெஷல்… கொடியசைத்த எம்பி கனிமொழி.! சீறிப்பாய்ந்த தூத்துக்குடி படகுகள்.!

மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகரில் படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தோடங்கி வைத்தார்.   நேற்று உலகம் முழுக்க மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறிய ரக மோட்டார் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த … Read more

திமுகவின் புதிய துணை பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி.? நாளை மறுநாள் அதிகாரபூர்வ அறிவிப்பு.?

திமுக துணை பொதுச்செயலாளராக தூத்துக்குடி எம்.பி கனிமொழியை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் பொதுக்குழுவில் வெளியாகும் எனவும் தகவல் பரவி வருகிறது.  திமுகவின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அடுத்ததாக தலைவர், பொது செயலாளர், பொருளாளர் என முக்கிய நிர்வாகிகள் நாளை மறுநாள் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஏற்கனவே, திமுக … Read more

“தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா” – எம்பி கனிமொழி!

பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாளையொட்டி,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில்,தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா எனவும்,அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் எனவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் … Read more

உரம்,வேதிப்பொருள் துறையின் நாடாளுமன்றக் குழு தலைவராக எம்பி கனிமொழி நியமனம்..!

மாற்றியமைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றக் குழுக்களில் தமிழக எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற குழுக்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.அதன்படி, மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க எம்.பி.க்களும் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில்,உரம், வேதிப்பொருள் துறையின் நாடாளுமன்ற குழு தலைவராக தி.மு.க எம்பி கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துறையின் உறுப்பினராக அந்தியூர் எம்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து,சுகாதாரத்துறை உறுப்பினராக தி.மு.க எம்பி கனிமொழி சோமு, எம்பி செந்தில்குமார் ஆகியோரும் சட்டத்துறை உறுப்பினர்களாக … Read more

“தங்கள் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது அரணாக அமையும்” – எம்.பி கனிமொழி நன்றி..!

தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அரணாக அமையும் என்று முதல்வருக்கு எம்.பி கனிமொழி நன்றி கூறியுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம் ” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். அதன்படி,பல்வேறு  புலம்பெயர் தமிழர் நல … Read more

“பூமித்தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால்”…….. – எம்.பி கனிமொழி ..!

பூமி தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால் இயற்கையை அழிக்காமல் இருந்திருப்போம் என்று எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது ( IPCC ) “காலநிலை மாற்றம் 2021” என்கிற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில்,இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன்,எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா,எம்.எல்.ஏ  வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். … Read more

Guwahati IIT:”கவுஹாத்தி ஐ.ஐ.டி. பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது” – எம்பி கனிமொழி வேதனை…!

கவுஹாத்தி ஐ.ஐ.டி. பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று இரவு, ஐஐடி கவுகாத்தியில் மாணவி ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்து அடுத்த நாள் மீட்கப்பட்டு அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர் ஏப்ரல் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கவுகாத்தி … Read more

நீதிமன்ற தீர்ப்பு;மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி…!

மாநில அரசு அனுப்பும் விண்ணப்பத்தில் உள்ள மொழிகளிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார். தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,”ஒரு மாநில … Read more

“தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது” – எம்.பி கனிமொழி ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து எம்.பி கனிமொழி மரியாதை செலுத்தினார் .அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன்,  கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “ தமிழக மண் மற்றும் மண்ணின் பெருமைகளை பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து காப்பாற்றப்படும். தமிழ் மண்ணின் பெருமைகளை எந்தவொரு காலகட்டத்திலும் முதல்வர் … Read more

தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் திமுக எம்.பி.கனிமொழி ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் திமுக எம்.பி கனிமொழி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் சென்றுள்ளனர். திமுக எம்.பி கனிமொழி தங்கள் முகாமிற்கு வருகை தருவதை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைவரிடமும் நலம் … Read more