கிரிப்டோகரன்சியால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கூறுகையில்: “எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான்.ஏனெனில்,பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது. இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் … Read more

பண மோசடி வழக்கு : அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட இருவர் நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன் பின் திமுகவில் இணைந்த இவர், திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக கூறி … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி – அமலாக்கத்துறை சம்மன்..!

பண மோசடி புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது சிலரால் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இதனால்,அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் ,நண்பர்கள் என பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி,சண்முகம்,ராஜ்குமார்,அசோக் குமார் என நான்குபேர் மீது ஒரு வழக்கும் ,37 பேர் … Read more