இது மத்திய, மாநில அரசுகளின் கடமை – மநீம

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அந்த வாழ்த்து குறிப்பில், ‘உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைபுரியும் போராளிகளுக்குப் பாராட்டுகள். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, … Read more

படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி – மநீம

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் … Read more

இவர்களுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! – மநீம

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்காலுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம்  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட … Read more

சாதி, மதம், இனம், மொழி கடந்து, மனிதம் நேசிக்கும் அனைவரும் உறுதியேற்போம் – மநீம

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளை போற்றுவது நம் கடமை என மக்கள் நீதி மய்யம் ட்வீட். கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மெய் … Read more

வரலாறு காணாத மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்! – மநீம

விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை வேண்டும் என மநீம வலியுறுத்தல்.  விவசாயிகள் வரலாறு காணாத மழையால் பரிதவித்து வரும் நிலையில், சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்த நடவடிக்கை வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். பேரிடர் … Read more

ஒருநாள் பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை – கமலஹாசன்

பிறந்த நாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமலஹாசன் அவர்கள் தனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் அரசர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  என்னுடைய வயது எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் எனக்கு கௌரவத்தை சேர்க்கும் என … Read more

இது யானைப்பசிக்கு சோளப்பொரி! – மநீம

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி என மநீம அறிக்கை.  ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து மநீம ஆவின் பால் கொள்முதல் விலை … Read more

இது நகரசபையா, இல்லை திமுகவின் நாடகசபையா? – மநீம

நகரசபை கூட்டம் கட்சி கூட்டம் போல் நடத்தப்பட்டதாக மநீம கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், ‘கடந்த 01-11-2022 அன்று தமிழகத்தில் முதன் முறையாக பகுதி சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மநீம இதனை வரவேற்று அறிக்கையும் விடுத்திருந்தது. இக்கூட்டங்களானது அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே மநீமவின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு. நடந்தது என்ன ? தலைநகரான சென்னையில் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கூட்டங்கள் நடத்தப்பட்ட பிற மாவட்டங்களில் … Read more

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! – மநீம

கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம அறிக்கை.  தமிழகத்தில்  தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம், ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிப்பதாகவும், கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம்! … Read more

தமிழக அரசு உடனடியாக இது தொடர்பாக ஆணை பிறப்பிக்க வேண்டும்! – மநீம

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதி வழங்க வேண்டும் என மநீம வலியுறுத்தல்.  வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில்,’ வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, பயிற்சி மருத்துவராகும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் … Read more