மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி..!

மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ராகுல்காந்தியை அவரது இல்லத்தில்  சந்தித்துள்ளார். டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், … Read more

இந்திய ஒற்றுமை பயணத்தில் இன்று ராகுல் காந்தியுடன் இணைகிறார் கமலஹாசன்..!

இன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில், ராகுல் காந்தியுடன் இணைந்து, கமலஹாசன் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.  காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில், ராகுல் காந்தியுடன் இணைந்து, கமலஹாசன் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம் – மநீம

மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மநீம அறிக்கை.  மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மநீம, கல்வியில் சிறந்த தமிழகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு மாணவர்களிடம் ஒழுக்கத்தை போதிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என … Read more

ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல – கமலஹாசன்

எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என கமலஹாசன் ட்வீட்.  வரும் 2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து மநீம கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, … Read more

ம.நீ.மய்யத்தில் மீண்டும் இணைந்தார் அருணாச்சலம்!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அருணாச்சலம் மீண்டும் கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால் தான் முடியும் என்பதை உணர்ந்து … Read more

விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை – மநீம

பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மநீம வலியுறுத்தல்.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை கண்டித்தும், புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி வலியுறுத்தியும் மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உடனடியாக பள்ளி கட்டிடங்களை சீரமைக்கவும், புதிய கட்டிடங்களை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்…! அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? – மநீம

ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் என மநீம அறிக்கை.  திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அந்தப் பணி முடிந்த நிலையில், அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுத்து நிறுத்தி உள்ளனர்.  இந்த நிலையில், இதுகுறித்து ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி … Read more

திண்டுக்கல் காவல்துறையின் மாற்றாந்தாய் மனப்போக்கை கண்டிக்கிறோம் – மநீம

மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுத்த திண்டுக்கல் காவல்துறையைக் கண்டித்து மநீம ட்விட். மக்கள் நீதி மய்ய கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ‘மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுக்கும் திண்டுக்கல் காவல்துறையைக் கண்டிக்கிறோம். திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அந்தப் பணி முடிந்து, இன்று மநீம மாநிலச் செயலாளர் அவர்களின் தலைமையில் அந்தக் கொடிக் … Read more

அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – மநீம

அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மநீம வலியுறுத்தல்.  தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் … Read more

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பாஜக முக்கிய புள்ளி..!

கமல்ஹசன் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவர் முனியசாமி.  தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவராக இருந்தவர் முனியசாமி. இந்த நிலையில், இவர் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், மநீம கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு நம்மவர் அவர்கள் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் திரு.V.முனியசாமி அவர்கள் கட்சியில் இணைந்தார். அப்போது … Read more